திருவிழாக்களுக்கு அட்டை மூலம் போடும் செட் தான் அந்த கூட்டம்; பிரேக் விட்டு பிரேக் விட்டு பிரச்சாரம் - விஜய் போட்டியிடும் கிழக்கு தொகுதியில் உதயநிதி
திருவிழாக்களுக்கு அட்டை மூலம் போடும் செட் தான் அந்த கூட்டம்; பிரேக் விட்டு பிரேக் விட்டு பிரச்சாரம் - விஜய் போட்டியிடும் கிழக்கு தொகுதியில் உதயநிதி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் தற்போது திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் பக்கம் திரும்பியுள்ளது.
புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நேரடியாக இந்த தொகுதியில் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து, ஆளுங்கட்சியான திமுக சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான இனிகோ இருதயராஜ் மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் ;
நான் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று சில அறிவாளிகள் கேட்கிறார்கள். இது கூட தெரியாத தற்குறி கூட்டத்திடம் என்ன கேட்பது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ஒரே தொகுதிதான் என்பதை தற்குறி கூட்டத்திடம் எப்படி புரிய வைப்பது. கொரோனா லாக்டவுன் போல சிலர் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
நமது வேட்பாளர், அண்ணன் இனிகோ இருதயராஜ் அவர்களை நீங்கள் மீண்டும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அவரை நீங்கள் வெற்றி பெற வைத்தால், உங்கள் குறைகளை கேட்க அவர் உங்கள் வீடு தேடி வருவார். அவருக்கு Work From Home என்றெல்லாம் வீட்டில் உட்கார்ந்துகொண்டு வேலை செய்யத் தெரியாது. எப்போதுமே மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி நின்று உழைக்கக்கூடியவர் நமது இனிகோ"
நாம் அவர்களை போல பிரேக் விட்டு பிரேக் விட்டு பிரச்சாரம் செய்யவில்லை. சிலர் இன்று ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டாகிவிட்டனர். நாம் ரெஸ்ட் இல்லாமல் தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கிறோம். சோர்வடையாமல் மக்களை சந்தித்து கொண்டிருக்கிறோம். உலகமே கொரோனா லாக்டவுனில் முடங்கியிருந்தது. அப்போது கூட திமுகவினர் மக்களுக்கு என்ன தேவையோ அதை களத்தில் இறங்கி செய்தோம்.
இனிகோ இருதயராஜ் ஒரு தொகுதியில் மட்டும் தான் வேட்பாளராக இருக்கிறார். இனிகோவுக்கு தமிழ்நாடு முழுவதும் நண்பர்கள் உள்ளனர். சென்னையில் நண்பர்கள் உள்ளனர். அங்கேயும் அவர் பல தொகுதிகளில் நிற்பதற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் சிலர் இங்கே ஒரு கால், அங்கே ஒரு கால் வைத்துள்ளனர். அப்படியில்லாமல் 2 கால்களையும் திருச்சி கிழக்கில் தான் வலுவாக வைத்துள்ளார்.
புறக்கணிக்க வேண்டும்;; இங்கு நின்று வெற்றி பெறுவேன் என்பதில் உறுதியாக உள்ளார். ஒரு இடத்தில் நின்றாலே வெற்றியை தேடி தருவீர்கள் என்று அவருக்கு தெரியும். உங்கள் மீதுள்ள நம்பிக்கையில், தைரியத்தில் நிற்கிறார். தற்குறிகளிடம் என்ன பேசுவது. நீ கத்தறதை கத்து, நான் உழைப்பதை உழைப்பேன் என்று சொல்லி வேலையை பார்ப்போம். மக்கள் அவர்களை புறக்கணிக்க வேண்டும்.
இனிகோ இருதயராஜை வெற்றி பெற வைத்தால் அவர்கள் உங்கள் வீடு தேடி வருவார். அவருக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் எல்லாம் தெரியாது. உங்கள் வீடு சுக துக்கம் நிகழ்வுகளில் கலந்துகொள்வார். உங்களை அவர் வீட்டிற்கு வர சொல்ல மாட்டார். இந்த காரியத்தை அவர் செய்ய மாட்டார். உங்கள் குடும்பத்தில் ஒருவராக இருப்பார். திருவிழாக்களுக்கு அட்டை மூலம் போடும் செட் தான் அந்த கூட்டம்.
அதை அட்டை என 4 மாதங்களுக்க முன்பே சொல்லிவிட்டேன். அது அட்டை தான் என்று இன்று களத்தில் நிரூபணமாகிவிட்டது. காற்றடித்தால் பறந்துவிடும். திருவிழா முடிந்ததும் செட்களை கழற்றுவது போல, அவர்களும் தேர்தல் முடிந்தவுடன் இங்கிருந்து காணாமல் போய்விடுவார்கள். திருச்சி கிழக்கு முட்டாள்கள் வசிக்கும் தொகுதி இல்லை. அறிவாளி மக்கள் வசிக்கும் தொகுதி என்பதை காட்ட வேண்டும் எனப் பேசினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0