தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் ; எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை- வைத்திலிங்கம்

Apr 11, 2026 - 18:51
 0  56
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் ; எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை- வைத்திலிங்கம்

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் ; எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை- வைத்திலிங்கம்

சென்​னை​யில் தேர்தல் பறக்​கும் படை அதி​காரி​களின் சோதனை​யில் 100 டம்மி வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் சிக்​கின. ஒரத்​த​நாடு திமுக வேட்​பாளர் வைத்​திலிங்​கம் படத்​துடன் கூடிய விசிட்​டிங் கார்​டு​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

சென்னை அண்​ணாநகர் சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட அரும்​பாக்​கம் 100 அடி சாலை​யில் நேற்று முன்​தினம் இரவு தேர்​தல் பறக்​கும் படை​யினர் வாகன சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது அந்த வழி​யாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை மடக்கி சோதனை செய்​தனர். அப்​போது அதில் 100 டம்மி மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் (இவிஎம்) இருந்​தது தெரிய​வந்​தது.

மேலும் திமுக ஒரத்​த​நாடு சட்​டப்​பேரவை தொகுதி வேட்​பாளர் வைத்​தி​யலிங்​கத்​தின் புகைப்​படங்​கள் அடங்​கிய விசிட்​டிங் கார்​டு​கள் கொண்ட 5 பார்​சல்​கள் இருந்​தன. இதனைக் கண்டு அதிர்ச்​சி​யடைந்த தேர்​தல் பறக்​கும் படை​யினர் அனைத்​தை​யும் பறி​முதல் செய்​தனர்.

பின்​னர், அவற்றை அண்​ணாநகர் தொகுதி தேர்​தல் நடத்​தும் அதி​காரி அலு​வல​கத்​துக்​குக் கொண்டு சென்​றனர். 

விசா​ரணை​யில் பார்​சல் கொண்டு சென்ற நபர் சேலத்​தைச் சேர்ந்த செல்​வம் என்​பதும், ஆட்டோ ஓட்டி வந்​தவர் அண்ணா நகரைச் சேர்ந்த கணேசன் என்​பதும் தெரிய​வந்​தது.

பறி​முதல் செய்​யப்​பட்ட டம்மி இவிஎம் இயந்​திரங்​களை தனியார் பேருந்து மூலம் ஒரத்​த​நாடு சட்​டப்​பேரவை தொகு​திக்கு அனுப்பி வைக்க திட்​ட​மிட்டு இருந்​ததாகவும் கூறப்பட்டது.

இந்த விவ​காரம் ஒரத்​த​நாடு சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்​டது என்​ப​தால் அந்த தொகுதி தேர்​தல் நடத்​தும் அதி​காரிக்​கு தகவல்​ தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தஞ்சாவூரில் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது; நான் பொது வாழ்க்கைக்கு வந்து 50 வருடங்களுக்கும் மேல் ஆகுது.

இதுவரைக்கும் நான் விசிட்டிங் கார்டு கூட அடிச்சது கிடையாது. எனது அரசியல் வாழ்க்கைக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்தில் யாரோ என் புகைப்படத்துடன் விசிட்டிங் கார்டு அடித்து உள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேர்தல் கமிஷனும், காவல்துறையும் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் எனக்கு அவதூறு பரப்பும் வகையில் குறிப்பிட்ட ஒரு தனியார் தொலைக்காட்சியில் மட்டும் செய்தி ஒளிபரப்பப்பட்டது. இது குறித்து நான் அந்த தொலைக்காட்சி நிருபரிடம் பேசி உள்ளேன். இது ஒரு தவறான செய்தி.

இதற்கு மறுப்பு அறிக்கை வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளேன். மறுப்பு அறிக்கை வெளியிடவில்லை என்றால் காவல்துறையிடம் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளேன். 

சசிகலா காலில் விழுந்து தான் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனார். இது குறித்து அவர் பெரியவர் காலில் விழுவது தவறு இல்லை என்று சொல்கிறார். பின்னர் ஏன் சசிகலாவை எடப்பாடி பழனிசாமி கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0