தேர்தல் விதிமீறல் புகார்களுக்கு தனி எண்கள்- திருச்சி எஸ்.பி.
தேர்தல் விதிமீறல் புகார்களுக்கு தனி எண்கள்- திருச்சி எஸ்.பி.
திருச்சி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் புகார்களுக்கு தனி எண்கள் கொடுக்கப் பட்டிருப்பதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது ;
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23.04.2026 ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் கண்காணிக்கவும், பறிமுதல் செய்யவும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 24 மணிநேரமும் தொகுதி வாரியாக நிலையான கண்காணிப்பு குழு (SST) மற்றும் பறக்கும் படை குழுவினர் (FST) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும். இம்மாவட்டத்தில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள 13 சோதனைச் சாவடிகள் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட 4 சோதனைச் சாவடிகளில் மாவட்ட காவல் துறையினருடன் இணைந்து மத்திய ரிசர்வ் காவல் படையினர் தீவிரமாக வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல், பரிசு பொருட்கள் விநியோகம் மற்றும் பணம் பட்டுவாடா போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள். 8939146100, 100, 0431-2333629 மேற்கண்ட தொலைபேசி எண்களை அணுகுமாறு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0