விஜய் வெற்றி பெற மும்மத பிரார்த்தனையில் ஈடுபட்ட ஆர் கே ராஜா 

Apr 2, 2026 - 17:47
 0  194
விஜய் வெற்றி பெற மும்மத பிரார்த்தனையில் ஈடுபட்ட ஆர் கே ராஜா 

விஜய் வெற்றி பெற மும்மத பிரார்த்தனையில் ஈடுபட்ட ஆர் கே ராஜா 

தமிழக சட்டமன்றத் தேர்தல் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்தத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அவர்கள் கேட்ட விசில் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. தவெக தலைவரும், முதல்வர் வேட்பாளருமான ஜோசப் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

சென்னையில் தங்கியிருக்கும் விஜய்க்கு ஆதரவாகவும், அவர் வெற்றி பெற வேண்டியும் விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவரும், விஜய்யின் தீவிர ஆதரவாளருமான ஆர்.கே. ராஜா மும்மத பிரார்த்தனையில் ஈடுபட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் ஆலயத்தில் விஜய் பெயரில் அர்ச்சனையும், சுமார் 1,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தளமாக திருச்சி சிங்காரதோப்பில் அமைந்துள்ள நத்தர்ஷா பள்ளிவாசல் (நத்தர்ஷா வலி தர்கா)வில், தவெக தலைவர் விஜய் பெயரில் பிரார்த்தனையும், திருச்சி எடத்தெரு சகாய மாதா சர்ச்சில் அவரது பெயரில் பிரார்த்தனையிலும் விஜய் தொண்டர்களுடன் சென்று ஈடுபட்டார்.

மேலும், திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களிடம் விசில் சின்னத்திற்கு விஜய் மக்கள் இயக்கம் முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா தலைமையில் நிர்வாகிகள் மிளகுபாறை சுப்பிரமணி, உப்பு பாறை ஞானவேல் , தொட்டியம் பாரதிராஜா, உறையூர் சரண்ராஜ், லால்குடி கலை, சமயபுரம் சதீஷ்குமார் , மணப்பாறை நடேஷ், லால்குடி லோகு, வையம்பட்டி தனசேகர், புத்தூர் நடராஜ், அரியமங்கலம் ஆசிப் பாஷா, தொட்டியம் ஹரிஹரன், லால்குடி விஜய், ரமேஷ், உறையூர் முத்துக்குமார், திருவானைக்கோவில் சங்கர், பாரதி, மணச்சநல்லூர் சுரேஷ், ஈச்சம்பட்டி சிவா, புத்தூர் ரேணுகாதேவி, விஜய் , உறையூர் ரஞ்சித், தொட்டியம் கார்த்தி, மலைக்கோட்டை பாபு உள்பட பலரும் தெப்பக்குளம், என்.எஸ். பி ரோடு, சத்திரம் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட் , எடத்தெரு பகுதிகளில் துண்டறிக்கை கொடுத்து விசில் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

முன்னதாக, திருச்சி பிரச்சாரத்தில் பங்கேற்ற விஜய்க்கு பாலக்கரையில் நிர்வாகிகளுடன் இணைந்து சால்வை கொடுக்க முற்பட்டார் ஆர்கே ராஜா. விஜயும் அவரைப் பார்த்ததும் பிரச்சார வாகனத்தை நிறுத்தி அவரிடம் இருந்து சால்வை பெற்றுக் கொண்டு கை குலுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1