விஜய் போட்டியிடும் தொகுதியில் வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த முதல்வர்

Apr 1, 2026 - 12:16
 0  75
விஜய் போட்டியிடும் தொகுதியில் வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த முதல்வர்

விஜய் போட்டியிடும் தொகுதியில் வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் 

திமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தை நேற்று திருவாரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கினார். நேற்று இரவு சாலை வழியாக திருச்சி வந்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்தார்.

பின்னர் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக இன்று காலை 6:30 மணி அளவில் தான் தங்கி இருந்த விடுதியில் இருந்து கிளம்பிய முதல்வர் ஐயப்பன் கோயில், கண்ட்டோன்மென்ட், பீமநகர், பாலக்கரை, மரக்கடை வழியாக காந்தி மார்க்கெட்டை சென்றடைந்தார். அவருடன் மூன்று பாதுகாப்பு வாகனங்கள் மட்டுமே உடன் சென்றன. மிகப் பெரிய அளவில் பாதுகாப்பு கெடுபிடிகள் எதுவும் இல்லை.

காந்தி மார்க்கெட் மிளகாய் மண்டி அருகே காரை விட்டு இறங்கிய அவர் அங்கு தரைக்கடை வைத்துள்ள பெண்கள், வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தபடியே நடந்து சென்றார். மேலும், பெண்கள் தன்னிடம் கூற விரும்புகின்ற கருத்தை நின்று நிதானமாக கேட்டார்.

இதனால் உற்சாகமடைந்த பெண் ஒருவர் “நீங்கள் இருக்கும் வரை எங்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை” என்றார். மற்றொரு பெண்மணி “எங்க சாமி தரையில் வந்துருச்சு” என்றார். அவரை அமைச்சர் நேருவும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் சமாதானப்படுத்தினர்.

காந்தி மார்க்கெட் பிரதான வாயில், தஞ்சாவூர் சாலை வழியாக காந்தி மார்க்கெட்டுக்குள் சென்றார். மீண்டும் அதே வழியில் வெளியே வந்த ஸ்டாலின் பாலக்கரை ரவுண்டானா வரை நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

நடைபயணத்துடன் கூடிய வாக்கு சேகரிப்பை நடத்திய ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு தான் தங்கி இருக்கும் நட்சத்திர விடுதிக்கு சென்றடைந்தார். 

முன்னதாக தமிழக முதல்வர் நடை பயிற்சி உடன் கூடிய வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தொகுதி திருச்சி கிழக்கு தொகுதி. இத்தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். இது தொகுதியில் தவெக தலைவர் விஜய்யும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0