திருவாரூரில் இன்று, திருச்சியில் நாளை தேர்தல் பிரச்சாரம் செய்யும் மு.க. ஸ்டாலின்

Mar 31, 2026 - 10:08
 0  23
திருவாரூரில் இன்று, திருச்சியில் நாளை தேர்தல் பிரச்சாரம் செய்யும் மு.க. ஸ்டாலின்

திருவாரூரில் இன்று, திருச்சியில் நாளை தேர்தல் பிரச்சாரம் செய்யும் மு.க. ஸ்டாலின் 

தி​முக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்​து, தமிழக முதல்​வரும் திமுக தலை​வரு​மான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 31) திரு​வாரூரிலிருந்து தனது தேர்​தல் பிரச்​சா​ரத்தை தொடங்​கு​கிறார்.

திரு​வாரூர் தெற்கு வீதி​யில் இன்று மாலை 5 மணிக்கு நடை​பெறவுள்ள பிரச்​சா​ரப் பொதுக் கூட்​டத்​தில் மு.க.ஸ்டா​லின் கலந்​து​கொண்​டு, திமுக வேட்​பாளர்​கள் திரு​வாரூர் பூண்டி கே.கலை​வாணன், மன்​னார்​குடி அமைச்​சர் டிஆர்​பி.​ராஜா, திருத்​துறைப்​பூண்டி இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி வேட்​பாளர் க.மாரி​முத்​து, உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட​வுள்ள நன்​னிலம் எஸ்​டிபிஐ வேட்​பாளர் முகமது முபாரக் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

கடந்த 2019 மக்​கள​வைத் தேர்​தல், 2021 சட்​டப்​பேர​வைத் தேர்தல், அதைத் தொடர்ந்து 2024 மக்​கள​வைத் தேர்தலிலும் தனது பிரச்​சார பயணத்தை ஸ்​டா​லின் திருவாரூரிலிருந்து தொடங்​கி​யது குறிப்​பிடத்​தக்​கது.

தொடர்ந்​து, நாளை (ஏப்​.1) காலை திருச்சி உழவர் சந்தை மைதானத்​திலும் மாலை 5 மணி​யள​வில் கரூர் ராயனூரிலும் நடை​பெறும் பொதுக்கூட்​டத்​தி​லும் கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்​துப் பேசுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் நாளை திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதை முன்னிட்டு அமைச்சர்கள் பரபரப்புடன் இயங்கி வருகின்றனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0