"வேல்' தாங்கி வேட்புமனுதாக்கல் செய்த நாதக வேட்பாளர்
"வேல்' தாங்கி வேட்புமனுதாக்கல் செய்த நாதக வேட்பாளர்
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 15-ஆம் தேதி வெளியானது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று (30-ஆம் தேதி) தொடங்கியது. இதையொட்டி, அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து தொகுதிகளிலும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். ஏப்ரல் 6-ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான முதல் நளான இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில் மேற்கு தொகுதிக்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார். அதே போல் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கே.அமுதாவிடம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுவை, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் (எ) ராஜேஷ் என்பவர் பழனி முருகனின் 'வேல்' யை கையில் தாங்கியவாறு வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழகம் முழுவதும் இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
முன்னதாக, திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள், ஆடு, கோழி ஆகியவற்றுடன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் வேட்பாளருடன் தாரை தப்பட்டை முழங்க பேரணியாக வந்தனர்.
பின்னர், ஜல்லிக்கட்டு ராஜேஷ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்; திருவெறும்பூர் தொகுதி மக்கள் அன்பில் மகேஷை இருமுறை வெற்றிபெற செய்தார்கள். அவர் இந்த தொகுதிக்கு எதையுமே செய்யவில்லை. பத்து ஆண்டுகளில் 5 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்ததால் எதுவும் கிடைக்கவில்லை என்று கை விரித்தவர் ஐந்து ஆண்டுகள் ஆளுங்கட்ச்சியாக இருக்கும் போது என்ன செய்தார். அவர் வகிக்கும் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. அவரது தொகுதியிலேயே பள்ளிக்கூடங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இந்த நிலையில் மீண்டும் அவர் பொது மக்களை சந்தித்து வாக்கு கேட்க வந்துள்ளார்.
திருவெறும்பூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்சனையாக இருக்கும் சர்வீஸ் சாலை பிரச்சனைக்கு ஆளுங்கட்சியாக இருக்கும் போது அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்ன செய்தார்.
திமுக மற்றும் அதிமுக வினருக்கு சொந்தமான வணிக வளாகங்கள் பாதிக்கப்படும் என்பதால், அரியமங்கலம் பால் பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்காமப்படாமல் இருக்கிறது. சர்வீஸ் சாலை இல்லாததால் தினசரி நூற்றுக்கணக்கான விபத்துக்கள் நடக்கிறது. கடந்த சில வருடத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். என்னை வெற்றிபெறச்செய்தால் ஒராண்டுக்குள்ளாக சர்வீஸ் சாலை அமைத்துக்கொடுப்பேன். அது முடியாவிட்டால் என்னை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு பிரதிபலனாக எனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்றார்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0