பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி: 234 வேட்பாளர்களும் அறிவிப்பு

Mar 29, 2026 - 12:33
Mar 29, 2026 - 12:49
 0  81
பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி: 234 வேட்பாளர்களும் அறிவிப்பு

பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி: 234 வேட்பாளர்களும் அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் 234 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று மார்ச் 29-ந் தேதி அறிவித்து வருகிறார்.

சென்னை தாஜ் ஹோரமண்டல் நட்சத்திர விடுதியில் 234 வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டத்தை நடத்துகிறார் தவெக தலைவர் விஜய். இந்தக் கூட்டத்தில் புதுச்சேரியில் தவெக போட்டியிடும் 30 தொகுதிகளின் வேட்பாளர்களும் அறிமுகப்படுத்துகிறார்.

சட்டசபை தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் இரண்டு முனை போட்டி தான், ஒன்று டிவிகே இன்னொன்று டிஎம்கே இந்த இருவருக்கும் இடையில் மட்டும்தான் போட்டி. நான்கு முனை அல்ல 40 முனை அல்ல. இன்று நாம் நடத்தும் கூட்டம் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் என்று அனைவரும் சொல்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை இது மக்களுக்கான 'காப்பாளர்கள்' அறிமுகக் கூட்டம். தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து, அவர்களை எம்.எல்.ஏ-க்களாக மாற்ற வேண்டியது மக்களாகிய உங்கள் பொறுப்பு.

திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள், குவாரி கொள்ளை அடிப்பவர்கள், கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்களை தாக்குபவர்கள் திமுகவில் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். அனுபவத்தை வைத்துக் கொண்டு கொள்ளை அடிப்பவர்கள் எம்.எல்.ஏக்கள் அல்ல.. மக்களை காப்பவர்கள் தான் உண்மையான எம்.எல்.ஏ. அப்படிபட்டவரைகளை நானே தேர்வு செய்து தவெக வேட்பாளர்களாக களம் இறக்குகிறேன். தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமுனை போட்டி தான் என்றார்.

 பின்னர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய விஜய் தன்னை முதலில் அறிமுகப்படுத்திக் கொண்டார் பெரம்பூர் தொகுதியில் ஜோசப் விஜய், அதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில் ஜோசப் விஜய் என இரு முறை தன்னை அறிமுகப்படுத்தி மற்ற வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். அதன்படி, 

"பெரம்பூர்:விஜய்

திருச்சி கிழக்கு: விஜய்

கோபி செட்டி பாளையம்: செங்கோட்டையன்,

வில்லிவாக்கம்:ஆதவ் ஆர்ஜுனா

தி.நகர்: ஆதவ் அர்ஜுனா

திருச்செங்கோடு: அருண்ராஜ்

ஆயிரம் விளக்கு: ஜேசிடி பிரபாகர்

கொளத்தூர்: விஎஸ் பாபு

லால்குடி: கு.பகிருஷ்ணன்"

"பூந்தமல்லி (தனி) : ஆர்.பிரகாசம்

திருப்பூர் வடக்கு: சத்யபாமா

மதுரவாயல்: ரேரவந்த் சரண்

அம்பத்தூர்: பாலமுருகன்

மாதவரம்: எம்.எல்.விஜய் பிரபு

வால்பாறை: ஸ்ரீதரன்"

"மயிலாப்பூர்: வெங்கட்ராமன்,

செய்யூர் (தனி): மோகன் ராஜா

சேப்பாக்கம்: செல்வம்

மதுராந்தகம் (தனி): எழில் கேத்ரின்"

"ஓமலூர்: அதியமான்

காங்கேயம்; மணி

கோவை வடக்கு: வி சம்பத்குமார்

கோவை தெற்கு: வி செந்தில்குமார்

பர்கூர்; முரளிதரன்"

"விருதாச்சலம்: எஸ்.விஜய்

பண்ருட்டி: என்.மணிகண்டன்

கடலூர்: வி ராஜ்குமார்

குறிஞ்சிப்பாடி: ராஜ்குமார்

புவனகிரி: மகாலிங்கம்

முதுகுளத்தூர்: மலர்விழி

சிதம்பரம்; என்.பாரி

காட்டு மன்னார் கோவில் ( தனி) : என் சீனிவாசன்

பூம்பூகார்: ஜெ.விஜயாலயன்"

"நாகை: என்.சுகுமார்"

அறந்தாங்கி முகமது பர்வேஸ் 

புதுக்கோட்டை கேஎம் சரீப்

ஆலங்குடி  கந்தசாமி 

திருமயம்  சிந்து ராமசாமி 

கந்தர்வக்கோட்டை(தனி)சுப்பிரமணியன்

விராலிமலை முருகேசன்

வேதாரண்யம்: கிங்ஸ்லி ஜெரல்டு

மன்னார்குடி: யுவிம் ராஜராஜன்

திருவாரூர்: வி.வீரமணி

போடி: பிரகாஷ்

கம்பம்: ஜெகன்நாத் மிஸ்ரா

ராஜபாளையம்: ஜெகதீஸ்வரி

கும்பகோணம்; ஆர். வினோத்

சிவகாசி: கீர்த்தனா

சாத்தூர்: அஜித்

ஸ்ரீவல்லிப்புத்தூர்: கார்த்திக்

திருவையாறு: மணிகண்டன்

விருதுநகர்: செல்வம்

தஞ்சை: விஜய் சரவணன்

ஒரத்தநாடு: கே அரவிந்த

காரைக்குடி: பிரபு

பட்டுக்கோட்டை : மதன்

பேராவூரணி: டி சந்திர காண்டீபன்

விளாத்திகுளம் காசிராம்

தூத்துக்குடி: ஸ்ரீநாத்

ஸ்ரீவைகுண்டம்: சரவணன்

ஒட்டப்பிடாரம்: மதன்ராஜா

கரூர்: மதியழகன்

மானாமதுரை (தனி): டி இளங்கோவன்

மேலூர்: ஏ மதுரை வீரன்

மதுரை கிழக்கு: கார்த்திகேயன்

சோழவந்தான் (தனி): எம். வி கருப்பையா

மதுரை வடக்கு: ஏ கல்லாணை"எ ன 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து வருகிறார் விஜய்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0