9 ஆண்டுக்கு பின் அ.தி.மு.க அலுவலகத்தில் டிடிவி: அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு
9 ஆண்டுக்கு பின் அ.தி.மு.க அலுவலகத்தில் டிடிவி: அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதேபோல அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனும் அமித்ஷாவை சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தனர்.
இதன்படி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இன்றிரவுக்குள் தொகுதிப் பங்கீடு நிறைவடையும் எனவும் அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 9 ஆண்டுகளுக்கு பிறகு டிடிவி தினகரன் அதிமுக அலுவலகத்துக்கு வந்திருக்கிறார். அதை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த இ.பி.எஸ் ஏன் உங்களுக்கு கஷ்டமா இருக்கா? ஏதாவது ஒரு பிரச்னை வருமா என்று பார்க்கிறீர்கள். எந்த பிரச்னைக்கும் எங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் எனத் தெரிவித்தார்..
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0