திருச்சியில் 106 வயது முதியவருக்கு கண் அறுவை சிகிச்சை - தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
திருச்சியில் 106 வயது முதியவருக்கு கண் அறுவை சிகிச்சை - தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
மார்ச் மாதம் 2வது வாரத்தில் உலக கண்ணீர் அழுத்த விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பாக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர் அர்ச்சனாதெரேசா தெரிவித்ததாவது; குளுக்கோமா அதாவது கண் நீர் அழுத்த நோய் உலகளவில் மக்களிடம் சரி செய்ய முடியாத பார்வை இழப்பிற்கு மிக முக்கியமான காரணமாக விளங்குகிறது. குளுக்கோமா பார்வையை மெதுவாக குறைய செய்யும் பெரும்பாலான மக்களுக்கு அந்த நோயால் எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை. எனவே, சிறிது சிறிதாக பார்வை இழப்பு ஏற்படுகிறது.
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கிட்ட பார்வை சர்க்கரை நோய், கண்ணில் காயம், தொடர்ச்சியாக ஸ்டீராய்டு மருந்துகள் பயன்படுத்துவோர் மற்றும் குடும்பத்தில் ரத்த வழி உறவினர்களுக்கு குளுக்கோமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குளுக்கோமாவுக்கான சிகிச்சை முறைகள் கண் சொட்டு மருந்து, லேசர் மற்றும் அறுவை சிகிச்சை ஆகும். திருச்சி தி ஐ பவுண்டேஷனின் சாதனைகளின் சிறப்பம்சங்களில் கண் அழுத்தத்தாலும், கண்புரையாலும் பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த ராஜு என்கிற 106 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் தனது பார்வையை திரும்ப பெற்றவராக தனது தேவைகளைத் தாமாகவே கவனித்து கொள்ளும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.
2012-ல் இந்தியா மற்றும் சீனாவில் 100 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை பதியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2026-ல் திருச்சியில் உள்ள 'தி ஐ ஃபவுண்டேஷன்' இந்த சாதனையை படைத்துள்ளது.
குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மார்ச் 14 முதல் ஏப்ரல் 14 வரை (ஒரு மாதம்) எங்களது அனைத்து கிளைகளிலும் குளுக்கோமா நோய்க்கான இலவசமான கண் பரிசோதனை வழங்கப்படும். மேலும் அறுவை சிகிச்சை செய்து கொள்வோருக்கு கட்டணத்தில் 10 சதவீதம் சலுகைகள் வழங்கப்படும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தி ஐ ஃபவுண்டேசன் கண் மருத்துவமனை அனைத்து ஊர்களிலும் இலவச கண் பரிசோதனை முகாம்களும் நடத்தி வருகின்றது என்றார்.
இதனை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ராயல் லயன்ஸ் சங்கம் அரிமா முகம்மது ஷபி, அரிமா சரவணன் ஆகியோர் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். தலைமை மருத்துவர் டாக்டர்.அர்ச்சனா தெரேசா கண்ணீர் அழுத்த நோய் பற்றிய விழிப்புணர்வு உரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் சமயபுரம் அருகே உள்ள கே.ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் தி ஐ பவுண்டேஷன் ஊழியர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி மேலாளர் லூமன், செந்தில்குமார் மற்றும் மக்கள் தொடர்பு குழுவினர் இணைந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.
முன்னதாக, நிறுவனத்தின் பொது மேலாளர் லோகநாதன் வரவேற்புரை வழங்கினார். இறுதியில் கிளை மேலாளர் ஜெகதீஸ்வரி நன்றியுரை வழங்கினார்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0