தமிழ்நாட்டில் சட்டம் இருக்கிறது, ஒழுங்கு இல்லை, நிர்வாகம் இல்லை - திருச்சி ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்பி ப.குமார்
தமிழ்நாட்டில் சட்டம் இருக்கிறது, ஒழுங்கு இல்லை, நிர்வாகம் இல்லை - திருச்சி ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்பி ப.குமார்
சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தேஜ கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமையை கண்டித்து இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேஜ கூட்டணி தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், திருச்சி மரக்கடை அருகே திமுக அரசை கண்டித்து அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்சோதி,ஜெ.சீனிவாசன், கழக அமைப்பு செயலாளர்கள் டி.ரத்தினவேல்,எஸ்.வளர்மதி,வெல்லமண்டி நடராஜன், ஆர்.மனோகரன் மாநில இளைஞர் அணி செயலாளர் என்.ஆர்.சிவபதி மற்றும் பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர்கள் கே.கே.ஒண்டிமுத்து, அஞ்சா நெஞ்சன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர்கள் ராஜசேகரன், பா.செந்தில்நாதன், முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கா.உமாநாத்,மா.பிரின்ஸ்,பி.கே.திலீப் குமார்,மு.கருணாநிதி தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் இன்டர்நெட் என்.ரவி,என்.குணா, கே.டி.தனபால்,கே.வி.ஜி.ரவீந்திரன், ஜி.சிவராமன், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் சிங்கத்தமிழர் முன்னேற்றக் கழகம் தலைவர் ஆர்.வி.பரதன், இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் கருணாகரன், செல்வகுமார், பி மதியழகன், சதீஷ்குமார் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில பொருளாளர் பி.பிரபாகரன் சோழப் பேரரசு கட்சி நிறுவனர் என்.சரவணன் மழவராயர், புரட்சி பாரதம் கட்சி இளம் ஆதி அறிவுரை நம்பி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் பேசியதாவது ; தமிழ்நாட்டில் சட்டம் இருக்கிறது, ஒழுங்கு இல்லை. கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் தமிழகத்தில் 8000க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கிறது. கற்பழிப்புகள் 2080 கற்பழிப்புகள் திமுக ஆட்சியில் அரங்கேறியிருக்கிறது. போதைப் பொருட்களின் கீழ் பதினோராயிரம் வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்கள் மீது தவறான நடத்தைகளில் ஈடுபட்டவர்கள் 39,900 பேர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் அருகே நடைபெறும் கஞ்சா விற்பனையால் மாணவர்கள் சீரழிகின்றனர்.
திமுக அரசு இதில் சாதனை புரிந்திருக்கிறது இல்லையோ இந்தியா அளவில் பதிய பெற்ற மாநிலத்தில் தமிழகம் முதல் மாநிலமாக இருக்கின்றது. சமீபத்தில் மாணவி ஒருவர் இயற்கை உபாதைக்கு சென்று வீடு திரும்பும் வழியில் காமுவர்களால் சிதைக்கப்பட்ட சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை நினைத்துப் பாருங்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் காவல் துறையில் சென்று முறையிட்ட போது அலட்சியமாக நடந்து கொண்ட தமிழக காவல்துறையை என்ன சொல்வது, இதற்கு ஸ்டாலின் தான் காரணம்.
தமிழகத்தில் உள்ள பத்திரிகைகளில் வரக்கூடிய செய்திகளில் அதிகளவு கொலை கொள்ளை, கற்பழிப்பு போன்ற செய்திகள் தான் தற்போது முதல் இடம் பிடித்திருக்கிறது. தமிழ்நாட்டில் நீதிமன்றங்கள் மூலம் நீதி இருக்கிறது. ஆனால், நிர்வாகம் இல்லை. கடந்த தேர்தலில் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் 505. இதில் 165 வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றிவிட்டு, 345 வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழகம் முதல் இடத்தில் இருக்கின்றது என்று ஸ்டாலின் பேசுகிறார் என திமுக அரசின் கடன் சுமை உள்பட பல்வேறு பிரச்சனைகளை கடுமையாக சாடி பேசினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
1
Wow
0