திருச்சி காங்கிரஸ் சார்பில் ஆலோசனைக் கூட்டம் ; 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

Mar 16, 2026 - 18:08
 0  51
திருச்சி காங்கிரஸ் சார்பில் ஆலோசனைக் கூட்டம் ; 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

திருச்சி காங்கிரஸ் சார்பில் ஆலோசனைக் கூட்டம் ; 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் 

2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல்.ரெக்ஸ் தலைமையில், மாவட்ட பொருளாளர் முரளி முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளின் ஆலோசனையின்படி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு;

1. திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் அனைத்து நிர்வாகிகளும், தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் நாட்களில், சொந்த தொழில் மற்றும் குடும்ப பணிகளை ஒதுக்கி, இந்தியா கூட்டணி - தமிழ்நாடு தலைமை திமுக மற்றும் தோழமை கட்சிகளுடன் இணைந்து வேட்பாளர்களின் வெற்றிக்கு அரும்பாடுபடவேண்டும். 

2. 65 வார்டுகளிலும் காரியகமிட்டி அமைத்து, வேட்பாளரின் வெற்றிக்காக, தெருமுனை பிரச்சாரம் நடத்த வேண்டும்.

3. தகவல் தொழில்நுட்பம் பயனோடு தேர்தலை சிறப்பாக அணுகும் வகையில், நமது தலைமை அலுவலகமான தியாகி அருணாச்சலம் மன்றத்தில், வார்ரூம் அமைத்து பெண்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோ தினந்தோறும் வெளியிட வேண்டும்.

4. திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், 65 வார்டுகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமித்து தேர்தல் பணியாற்றிட வேண்டும்.

மேற்கண்ட நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஸ்ரீரங்கம் ஜெயம்கோபி, திருவானைக்காவல் தர்மேஷ், வரகனேரி இஸ்மாயில், காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், சுப்ரமணியபுரம் எட்வின், ஏர்போர்ட் கனகராஜ், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், புத்தூர் மலர் வெங்கடேஷ், உறையூர் பாக்யராஜ், பாலக்கரை இருதயராஜ், தில்லைநகர் ராகவேந்திரா, கிருஷ்ணா, அணி தலைவர்கள் முன்னாள் ராணுவ அணி ராஜசேகர், மாணவர் காங்கிரஸ் நரேன், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், எஸ்சி பிரிவு கலியபெருமாள், சிறுபான்மை பிரிவு மொய்தின், ஜவஹர் பால் மஞ்ச் எபினேசர், அமைப்பு சாரா மகேந்திரன், ஐடி பிரிவு கிளமெண்ட், ஊடக பிரிவு செந்தில், இலக்கிய பிரிவு பத்பநாபன், விவசாய அணி அண்ணாதுரை, கலைபிரிவு சுப்புராஜ், என்ஜிஓ அணி கண்ணன், விமல், சம்பத் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0