நமது முதல்வர் தேர்தல் அறிக்கையில் சொன்னதையும், சொல்லாததையும் செய்து காட்டியவர்- அமைச்சர் கே என் நேரு 

Mar 15, 2026 - 13:45
 0  30
நமது முதல்வர் தேர்தல் அறிக்கையில் சொன்னதையும், சொல்லாததையும் செய்து காட்டியவர்- அமைச்சர் கே என் நேரு 

நமது முதல்வர் தேர்தல் அறிக்கையில் சொன்னதையும், சொல்லாததையும் செய்து காட்டியவர்- அமைச்சர் கே என் நேரு 

இஸ்ரேல் - ஈரான்- அமெரிக்கா இடையேயான போர் காரணமாக கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாநகரங்களில் முக்கிய ஹோட்டல்கள் மூடப்பட்டும், உணவு வகைகள் குறைக்கப்பட்டும் வருகின்றன. 

இதனையடுத்து ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, திருச்சியில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், 'இந்தியா' கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கக் கோரியும், தமிழகத்திற்கான திட்டங்களை வழங்காமல் வஞ்சிப்பதாகக் கூறப்படும் ஒன்றிய அரசைக் கண்டித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டுக்கான திட்டங்களும் இல்லை, சிலிண்டர்களும் இல்லை என்றும், தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் ஒதுக்கீட்டில் பாஜக புறக்கணித்து வருகிறது என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளரும், மாநகர மேயருமான அன்பழகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கே. என்.நேரு பேசியதாவது; 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உள்ள அனைத்து கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி. கேஸ் சிலிண்டர் தட்டுபாட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

வருகின்ற தேர்தலில் மீண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க அனைவரும் உழைக்க வேண்டும்.

மாநில அரசு தொடர்ந்து கேஸ் சிலிண்டர் தட்டுபாட்டை போக்கவும், மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசிடம் நமது முதல்வர் பேசிக்கொண்டு தான் இருக்கிறார். 

மக்களின் நலனில் அக்கறை காண்பிப்பது நமது முதல்வர் மட்டும் தான். ஆகையால் வருகின்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக- கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அதற்கு நாம் முழுமையாக உழைக்க வேண்டும். யார் எதை சொன்னாலும் அவற்றை புறம் தள்ளிவிட்டு நமது வெற்றி என்ற இலக்கை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். 

குறிப்பாக வருகின்ற தேர்தலில் திருச்சியில் கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதியை ஒதுக்கினாலும் திமுக நிர்வாகிகள் உண்மையாக உழைத்து வெற்றி பெற வைப்போம்.

இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. ஆகையால் இன்றிலிருந்து 40 நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் உழைக்க வேண்டும். தமிழக முதல்வர் செய்த சாதனையை வீடு வீடாக சென்று அனைவரும் எடுத்து கூற வேண்டும்.

தேர்தல் நேரத்தில் அனைவரும் வாக்குறுதிகளை தொடர்ந்து அறிவித்து வருகிறார்கள். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி. பழனிச்சாமி ரூபாய் 10000 தருகிறேன் உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். ஆனால் திமுக ஆட்சியில் மகளிர்க்கு ரூபாய் 1000 தரப்படும் என்று அறிவித்தபோது எப்படி சாத்தியமாகும் என்று கேள்வி எழுப்பிய நிலையில் இன்று இவர் அறிவித்த வாக்குறுதிகளை எப்படி சாத்தியப்படுத்துவார். ஆகையால் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் புதிது புதிதாக அறிவிப்புகளை வெளியிடுவார்கள். ஆனால் நமது முதல்வர் தேர்தல் அறிக்கையில் சொன்னதையும், சொல்லாததையும் செய்து காட்டியவர். 

நாம் எதையும் கண்டு கொள்ளாமல் கூட்டணி கட்சி தோழருடன் ஒன்றிணைந்து வருகின்ற தேர்தலை எதிர்கொண்டு மீண்டும் திமுக ஆட்சி அமைப்பதற்கும், தமிழ்நாடு முதல்வராக மு. க. ஸ்டாலின் அவர்களை பதவி ஏற்பதற்கும் உழைக்க வேண்டும். வருகின்ற தேர்தலில் திமுக வெற்றி பெறுவது நிச்சயம் என பேசினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ் ,தேசிய முற்போக்கு திராவிடர் கழ கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி, மதிமுக, திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, SDPI, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், மக்கள் நீதி மையம், தமிழக வாழ்வுரிமை கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், தமிழர் தேசம் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சி, முக்குலத்தோர் புலிபடை கட்சி ,ஆதி தமிழர் கட்சி, ஆம் ஆத்மி உட்பட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0