விஜய் புறப்பட்ட விமானம் தாமதம் ஏன்?

Mar 15, 2026 - 10:41
 0  19
விஜய் புறப்பட்ட விமானம் தாமதம் ஏன்?

விஜய் புறப்பட்ட விமானம் தாமதம் ஏன்?

தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக கரூருக்கு சென்றபோது அவரை பார்ப்பதற்காக பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரசிகர்கள் ஒரே இடத்தில் கூடியதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 41 நபர்கள் பலியாகினர்.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

ஏற்கனவே ஜனவரி மாதம் 15 மற்றும் 19ம் தேதி ஆகிய இரு தேதிகளிலும் தவெக தலைவர் விஜய் டெல்லிக்கு நேரில் சென்று சிபிஐ விசாரணையில் கலந்து கொண்டார்.

இந்நிலையில்தான் மார்ச் 15ம் தேதியான இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக வேண்டும் என சம்மன் வந்ததைத் தொடர்ந்து நேற்று சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார் விஜய்.

அப்போது, விஜய்யின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தபோது அவரின் கைபையில் ஒரு கத்திரிக்கோல் இருந்ததால் விஜய் தடுத்து நிறுத்தப்பட்டார். இதன் காரணமாக 30 நிமிடங்கள் தாமதமாக அவரின் தனி விமானம் புறப்பட்டு சென்றது. அதேபோல் ஆதவ் அர்ஜுனா கையில் உயரக மது பாட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரும் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என சமூக வலைதளங்களில் வைரலானது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0