கரூரில் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து ;15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்
கரூரில் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து ;15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்
கரூர் மாவட்டம் வெள்ளியனைப் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து ஒன்று ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது, எதிர்பாராதவிதமாக பேருந்து தண்டவாளத்தில் பழுதாகி நின்றபோது, சரக்கு ரயில் பேருந்தின் மீது மோதியதில் 18 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த விபரம் வருமாறு;
கரூர் மாவட்டம் க.பரமத்தியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முடிந்து மாணவர்களை வீட்டில் இறக்கி விடுவதற்காக, கல்லூரி பேருந்தில் ஓட்டுனர் பெரியசாமி சென்று கொண்டிருந்தபோது ஜல்லிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் ரயில்வே ஆளில்லாத லெவல் கிராசிங்கில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அந்த நேரத்தில் வந்த சரக்கு ரயில் பேருந்தின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பலருக்கு கை, கால் மற்றும் உடல் பகுதிகளில் காயம் ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்ததும் அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக காயமடைந்த மாணவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்டதா அல்லது எதிர்பாராத விதமாக நடந்ததா என்பது குறித்து போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், சரக்கு ரயில் திண்டுக்கல் மாவட்டம் கரிகாளி பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து சிமெண்ட் தயாரிக்கும் பவுடர் ஏற்றிக் கொண்டு, புலியூர் சிமெண்ட் ஆலைக்கு சென்று கொண்டிருந்தது.
குளத்தூர் பகுதி லெவல் கிராசிங் பகுதியில் ஆட்கள் இல்லாததால், பேருந்து அந்த லெவல் கிராசிங்கை கடந்துள்ளது. அப்போது ரயில் வருவதைக் கண்டு பீதியடைந்த மாணவர்கள், பஸ்ஸில் இருந்து அவசர அவசரமாக இறங்க முயன்றனர். அதற்குள் ரயில், பஸ் மீது மோதிவிட்டது.இதில், கல்லூரி பஸ் பலத்த சேதமடைந்தது. மேலும், அதில் இருந்த மாணவர்கள் 18 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள மாணவர்களை நேரில் சந்தித்து ஜோதிமணி எம்.பி. நலம் விசாரித்தார்.
கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0