திருச்சி மாவட்ட சட்டப்பணி ஆணைகுழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம்; முதன்மை நீதிபதி கிரிஸ்டோபர் தொடங்கி வைத்தார்

Mar 14, 2026 - 14:55
 0  10
திருச்சி மாவட்ட சட்டப்பணி ஆணைகுழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம்; முதன்மை நீதிபதி கிரிஸ்டோபர் தொடங்கி வைத்தார்

திருச்சி நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்; தனியார் நிறுவனத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிய நீதிபதிகள்

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருச்சி நீதிமன்றத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். 

மாவட்ட நீதிபதிகள் கோபிநாத், கார்த்திகா, சரவணன், சண்முகப்பிரியா, சார்பு நீதிபதிகள் கௌதமன், மாரீஸ்வரி, அண்ணாமலை, கண்ணன்,சாந்தி , தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புவியரசு, திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பிரபு மற்றும் உரிமை இயல் நீதிபதிகள் குற்றவியல் நடுவர்கள் முன்னிலை வகித்தனர்.

முகாமில், திருச்சி விமான நிலையம் விரிவாக்கத்திற்கு, தனியார் தோல் நிறுவனத்திடம் இருந்து 4.92 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தியமைக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.43 கோடியே 85 லட்சத்து 73 ஆயிரத்து 766-ஐ அந்த தனியார் நிறுவனத்திடம் அதிகாரிகள், நீதிபதிகள் இணைந்து வழங்கினர்.

தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில், திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்.பி.கணேசன், சங்க செயலாளர் சி.முத்துமாரி, குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், வழக்கறிஞர்கள் சங்கத் துணைத் தலைவர் வடிவேல்சாமி , கூடுதல் அரசு வழக்கறிஞர் வி.சி வெங்கடாசலம், அரசு வழக்கறிஞர் மோகன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0