ஒரு தமிழனின் தலைமையில் இயங்கவே அதிமுகவில் இணைந்தேன்- நாதக முன்னாள் பேச்சாளர் காளியம்மாள்

Mar 13, 2026 - 11:28
 0  42
ஒரு தமிழனின் தலைமையில் இயங்கவே அதிமுகவில் இணைந்தேன்- நாதக முன்னாள் பேச்சாளர்  காளியம்மாள்

ஒரு தமிழனின் தலைமையில் இயங்கவே அதிமுகவில் இணைந்தேன்- நாதக முன்னாள் பேச்சாளர் காளியம்மாள்

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் சென்னையில் இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பி.காளியம்மாள். தன்னுடைய அதிரடி பேச்சால் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது 60,000 வாக்குகள் பெற்றார். அந்தத் தேர்தலின்போது அவரின் பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில், அவர் கடந்த பிப்ரவரியில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார். அப்போது, தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வகையில் எம் பயணம் தொடரும் என அறிவித்திருந்தவர், எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்தார். அவருடன் திமுக, அதிமுக, தவெக என அனைத்துக் கட்சிகளுமே பேச்சுவார்த்தையில் இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை காளியம்மாள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காளியம்மாள் தெரிவித்ததாவது ; ஒரு தமிழனின் தலைமையில் இயங்கவே அதிமுகவில் இணைந்தேன். ஒரு சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்துவந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று நான் இன்று அதிமுகவில் இணைந்துள்ளேன் என்றார்.

நாகையைச் சேர்ந்த காளியம்மாள் தனது ஆரம்ப காலத்தில் கடலோரப் பகுதி மக்களின் பிரச்​சினை​களுக்கு தீர்வு காணும் வகை​யில், 15 கடலோர மாவட்​டங்​களை ஒருங்​கிணைத்​து, ‘தமிழக மீனவ பெண் தொழி​லா​ளர்​கள் சங்​கம்’ என்ற அமைப்பை ஏற்​படுத்தி, அதன் மாநில பொதுச்​செய​லா​ள​ராக இருந்​வர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0