10 மரங்கள் நட்டால் தேர்வில் 10 மதிப்பெண்கள்; கிளையை வெட்டினால் 6 மாதம் சிறை: சீமான் அதிரடி

Aug 31, 2025 - 13:59
 0  5
10 மரங்கள் நட்டால் தேர்வில் 10 மதிப்பெண்கள்; கிளையை வெட்டினால் 6 மாதம் சிறை: சீமான் அதிரடி

10 மரங்கள் நட்டால் தேர்வில் 10 மதிப்பெண்கள்; கிளையை வெட்டினால் 6 மாதம் சிறை: சீமான் அதிரடி

திருத்​தணி அருகே நாம் தமிழர் கட்​சி​யின் சார்​பில் மரங்​களின் மாநாடு நடை​பெற்​றது. நான் ஆட்​சிக்கு வந்​தால் மரத்தை வெட்​டி​னால் ஆறு மாதம் சிறை தண்​டனை விதிக்​கப்​படும் என அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரி​வித்​தார். இதுகுறித்த விபரம் வருமாறு; சுற்​றுச்​சூழலை பாது​காக்​கும் வகை​யில் நாம் தமிழர் கட்சி சார்​பில் மரங்​கள் தினத்தை கொண்​டாட ஏற்​பாடு செய்​யப்​பட்​டது. திருத்​தணி அருகே அருங்​குளம் பகு​தி​யில் உள்ள மனிதநேய தோட்​டத்​தில் மரங்​களுக்கு இடை​யில் மரங்​களின் மாநாடு எனும் 'மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காகப் பேசுவோம்' என்ற தலைப்பில் பேசப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நம்மாழ்வார், சுந்தர்லால் பகுகுணா, மிரா அல்பாசா, வங்காரி மாத்தாய், நடிகர் விவேக் ஆகியோர் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தபட்டது. அவர்களின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் சுற்றுச்சூழல் உறுதிமொழியை வெளியிட்டார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இதில் 500-க்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர். அவர்​களுக்கு மரக்​கன்​றுகள் வழங்​கப்​பட்​டன. இம்​மா​நாட்​டில் திரு​வள்​ளூர், திருத்​தணி தொகு​தி​யில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களை சீமான் அறி​வித்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: இது மரங்​களுக்​கான மாநாடு என்று சொல்​வதை விட உயிர் காற்றை தரு​கிற தாய்க்கு நன்றி சொல்​லும் மாநாடு என்​று​தான் கூற வேண்​டும். இந்த காட்​டில் புலிகள் நுழைந்​ததும், ஒரு அணில் கூட கண்​ணில்​பட​வில்​லை, அணில்​களுக்​கும் சேர்த்து தான் காடு வளர்க்க நாங்​கள் போராடு​கிறோம். வாக்​குக்​காக இருப்​பவர்​கள் இது​போன்ற மாநாட்டை நடத்​த​மாட்​டார்​கள். காடு​களை அழித்து விரை​வாகச் செல்ல சாலை அமைத்த அரசுகள், தூய காற்​றுக்கு ரூ.4,500 கோடி ஒதுக்​கி​யுள்​ளனர். மரம் நடு​வோம் மழை பெறு​வோம் என்று சொல்​வார்​கள் ஆனால் எது​வும் செய்ய மாட்​டார்​கள். ஒரு மரம் கூட நடமாட்​டார்​கள். நாம் மரம் வளர்க்க வேண்​டும் அதை எப்​படி பராமரிக்க வேண்​டும் என்று யோசிப்​போம். "நான் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒவ்வொரு குழந்தையும் மரம் நட வேண்டும் என்று சொல்வேன். அதுபோல் பள்ளி மாணவன் ஒருவன் 10 மரங்கள் நட்டால் அவனுக்கு தேர்வில் பத்து மதிப்பெண் வழங்குவேன். 100 மரங்கள் நட்டால் 'சிறந்த தமிழ் தேசிய குடிமகன்' என பாராட்டுச் சான்று வழங்குவேன். வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். 1,000 மரம் நட்டால் அந்த மாணவனின் இறுதி சடங்கில் அரசு மரியாதை இருக்கும். மக்கள் மரம் நடுவதற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். சொந்த வீடாகவே இருந்தாலும், அங்குள்ள மரத்தை வெட்ட வேண்டுமென்றால் என்னை கேட்கவேண்டும். கிளையை வெட்டினால் கூட அது சகமனிதனின் கையை வெட்டுவதற்கு சமம் என்பதால், மனிதனை வெட்​டி​னால் தண்​டனை என்​பது​போல மரத்தை வெட்​டி​னால் ஆறு மாதம் சிறை தண்​டனை வி​திக்​கப்​படும். மனிதனின் பேராசை என்ற பெரும் தீ தான் மரங்​களை எரிக்​கிறது எனப்பேசி​னார்​. க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0