நாளை (மார்ச்.11)10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; 9,09,002 பேர் பங்கேற்பர்: மக்கள் சக்தி இயக்கம் வாழ்த்து

Mar 10, 2026 - 19:00
 0  36
நாளை (மார்ச்.11)10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; 9,09,002 பேர் பங்கேற்பர்: மக்கள் சக்தி இயக்கம் வாழ்த்து

நாளை (மார்ச்.11)10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; 9,09,002 பேர் பங்கேற்பர்: மக்கள் சக்தி இயக்கம் வாழ்த்து 

தமிழகம் முழுவதும் 4,219 மையங்களில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை நடக்கிறது. தேர்வை கண்காணிக்க 4,954 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

தேர்வு பணிகளில் 49,542 பணியாளர்கள் ஈடுபட உள்ளார்கள். தமிழகம் முழுவதும் உள்ள 12,467 பள்ளிகளில் இருந்து 8,82,806 மாணவ, மாணவிகளும், தனித் தேர்வர்கள் 26,196 பேர் என மொத்தம் 9,09,002 பேர் தேர்வை எழுதுகின்றனர் என தேர்வுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துகளை அதன் மாநில பொருளாளர் நீலமேகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; அன்பு மாணவச் செல்வங்களே வாழ்த்துகள்! நம்புங்கள்!! நம்மால் முடியும்!!!

அச்சமின்றி, முழு நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

 நீங்கள் செய்த கடின உழைப்பு கண்டிப்பாக நல்ல பலனைத் தரும். சிறந்த மதிப்பெண்களைப் பெற்று, உங்கள் கனவுகளை நனவாக்கி, நம்புங்கள் வாழ்வில் உயர்ந்த வெற்றிகளைப் பெற நம்மால் முடியும் என வாழ்த்துகிறோம்.

மாணவச் செல்வங்களுக்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினருக்கும் மக்கள் சக்தி இயக்கம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

மாணவர்கள் தங்கள் இலக்கை அடைந்து வாழ்க்கையில் சிறக்க மக்கள் சக்தி இயக்கம் மனமார்ந்த பிரார்த்தனைகளைத் தெரிவிக்கிறது என கே.சி.நீலமேகம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0