கோவையில் மதிய உணவில் பல்லி : 34 பள்ளி மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு- பள்ளி முன்பு போலீசார் குவிப்பு

Mar 10, 2026 - 17:20
 0  50
கோவையில் மதிய உணவில் பல்லி : 34 பள்ளி மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு- பள்ளி முன்பு போலீசார் குவிப்பு

கோவையில் மதிய உணவில் பல்லி : 34 பள்ளி மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு- பள்ளி முன்பு போலீசார் குவிப்பு 

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்து இருந்ததை அறியாமல் உண்ட 34 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது. இது குறித்த விபரம் வருமாறு ;

கோவை, கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று மதியம் வழக்கம் போல மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நான்காம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உணவை அருந்திக் கொண்டு இருந்தபோது, உணவை உட்கொண்ட சுமார் 34 மாணவர்களுக்கு அடுத்து அடுத்து வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட 34 மாணவர்களையும் பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளின் நிலை குறித்து அறிய உள்ளே செல்ல முயன்றனர். ஆனால், பள்ளி நிர்வாகம் அவர்களை அனுமதிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை கைமீறிச் சென்றதால், துணை ஆணையர் சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். 

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்; 30 ஆண் குழந்தைகள், 13 பெண் குழுந்தைகள் பாதிப்படைந்து உள்ளனர். இரவு 9 மணி வரைக்கும் மாணவர்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள். எல்லாரும் நலமாக உள்ளனர். உணவில் பல்லி விழுந்ததாக சொல்லும் நிலையில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்படி சம்பவம் நடக்க கூடாது.

 

பணியாளர் கவனக்குறைவா என்பதை விசாரணை முடிவில் தான் சொல்ல முடியும். 44 மாணவர்கள் உணவருந்தி உள்ளனர். 5 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

  பள்ளியில் உள்ள உணவு கூடத்தில் ஆய்வு செய்யப்படும். இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சர்குலர் அனுப்படும். என்ன நடந்தது என விசாரணை முடிந்து தெரிவிக்கிறேன் என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0