திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் முப்பெரும் விழா; கி.வீரமணி பங்கேற்பு
பெரியார் மருந்தியல் கல்லூரியில் முப்பெரும் விழா; கி.வீரமணி பங்கேற்பு
திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அன்னை மணியம்மையார் 107ஆவது பிறந்த நாள், உலக மகளிர் நாள் மற்றும் புத்தக வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நிறுவனத் தலைவர் டாக்டர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறை பேராசிரியரும் கலைப்புல முதன்மையருமான முனைவர் ந.முருகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர் கி.வீரமணியின் வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல், பெரியார் மருத்துவக் குழுமத்தின் செயல்பாடுகள் மற்றும் மூலிகை மருத்துவம் மற்றும் பயன்கள் - மூன்றாம் தொகுதி ஆகிய மூன்று புத்தகங்களையும் வெளியிட்டு மாணவர்கள் மத்தியில் உலக மகளிர் நாள் மற்றும் அன்னை மணியம்மையாரின் தொண்டு, பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு புத்தகங்களைப் பெற்றனர்.
முன்னதாக, பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை வரவேற்புரையாற்றினார். நிறைவாக துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0