கூட்ட நெரிசல்; ஜோத்பூர் - திருச்சி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி
கூட்ட நெரிசல்; ஜோத்பூர் - திருச்சி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி
ஜோத்பூர் - திருச்சி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
ரயில்களில் கூட்ட நெரிசலை குறைக்க வட மேற்கு ரயில்வே 2 ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைப்பதாக அறிவித்துள்ளது.
அதன்படி, ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகர் - திருச்சி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண் 22497/22498) செப்டம்பர் 1-ந்தேதி முதல் அக்டோபர் 3-ந்தேதி வரை தற்காலிகமாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது.
இதேபோல், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் - திருச்சி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (20481/20482) செப்டம்பர் 3-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. மேற்கண்டவாறு தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0