குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500; கட்டணமின்றி வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் - மகாபலிபுரத்தில் விஜய்
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 - மகாபலிபுரத்தில் விஜய்
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தவுடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும், பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம், அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும் என தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் மகளிர் தின கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதில் த.வெ.க. பெண் நிர்வாகிகளுடன் பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த பெண்கள் மேடை ஏற்றப்பட்டார்கள். அவர்களுக்கு விஜய் வேலு நாச்சியார் பெண்மையின் பேராண்மை என்ற புத்தகத்தை வழங்கினார். அத்துடன் கைக்கடிகாரமும் வழங்கி மகிழ்வித்தார்.
மகாபலிபுரத்தில் நடைபெற்ற தவெக மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பேசும்போது ஒரு குட்டிக்கதை கூறினார். விஜய் கூறிய குட்டிக்கதை பின்வருமாறு;
ஒரு பெரிய கோவில் யானை இருந்ததாம். அதை யாராலும் ஏமாற்ற முடியாது. ஆனால் ஜெகஜால கில்லாடி ஒருவர் தேங்காய்க்குள் சுண்ணாம்பை வைத்து ஏமாற்றி விட்டார். ஜெகஜால கில்லாடியின் நண்பர் அவரிடம் சென்று, இந்த யானையை ஏமாற்ற முடியாதே. எப்படி ஏமாற்றினாய் என்று கேட்டாராம். அது தொழில் ரகசியம் என்றாராம்.
பல வருடங்கள் கழித்து இருவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது, ஜெகஜால கில்லாடியின் நண்பர் அந்த யானைக் கதையை நினைவுப்படுத்தி, அந்த யானை ஏமாறாதே? ஒரேயொரு முறை தெரியாமல் ஏமாந்திருக்குமோ? என்று கூறியுள்ளார். அப்போது ஜெகஜால கில்லாடி எனது திறமை மீது நம்பிக்கை இல்லையா? 2-வது முறையாக என்ன செய்கிறேன் பார்க்கிறியா?
மீண்டும் ஒருமுறை அந்த யானையை ஏமாற்றுகிறேன் என்று சொல்லி, ஜெகஜால கில்லாடி பஞ்சு வைத்த போலி வாழைப்பழத்தை யானையிடம் நீட்டியுள்ளார். யானையும் பழத்தை வாங்குவதுபோல் தும்பிக்கையை அவர் கிட்ட கொண்டு வந்து, ஜெகஜால கில்லாடியை அப்படியே தூக்கி ஒரு சுழற்று சுழற்றி.., அதன்பின் என்ன நடத்திருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும்.
அடிப்பட்டு கிடந்த ஜெகஜால கில்லாடியிடம் அவரது நண்பர், யானைக்கு நினைவுத்திறன் அதிகம் என்றாராம். கதையில் யானை யாரென்றால் நமது வாக்காளர்கள். ஜெகஜால கில்லாடி யாரென்று கேட்டால், உங்கள் நினைவுக்கு யாராவது வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல ராஜா..
அது யாராகவும் இருந்துவிட்டு போகட்டும்.. இங்கு இருப்பது ஒன்றை யானை அல்ல. இரட்டை யானை, இரட்டை போர் யானைகள். என் சிங்கப் பெண்கள். உங்களை யாரும், எதையும்சொல்லி ஏமாற்ற முடியாது என்றார்.
பின்னர் தேர்தல் முதற்கட்ட வாக்குறுதிகளாக பன்னிரண்டு அறிவிப்புகளை வெளியிட்டார் விஜய். விஜய் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு ;
1. பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கான தனி இலாகா உருவாக்கப்படும்
2. மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் உரிமை தொகை ரூ.2500 வழங்கப்படும்
(நிபந்தனை: 60 வயது வரையிலான பெண்களுக்கு உரிமை தொகை; மத்திய, மாநில ஊழியர்களுக்கு விலக்கு)
3. அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்: கட்டணமின்றி வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள்
4. அண்ணன் சீர் திட்டம்: 1 சவரன் தங்கம், 1 பட்டு சேலை
5. காமராஜர் கல்வி உறுதித் திட்டம்: 1 முதல் +2 வரை பயிலும் மாணாக்கர்களின் தாய்(அ) பாதுகாவலருக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 பொருளாதார உதவித்தொகை
6. வெற்றிப் பயணத் திட்டம்: அரசு போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்.
7. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக "ராணி வேலுநாச்சியார் படை" உருவாக்கப்படும்
8. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைவான நீதி வழங்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றம் ஏற்படுத்தப்படும்
9. பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய Smart Panic Button பொருத்தப்படும்
10. ரேசன் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா நாப்கின்கள் வழங்கப்படும்.
11.சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்: மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் கடன் 100% மானியத்தில் வழங்கப்படும்.
12. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
*மௌனம் கலைத்த விஜய்*
தன் மீது மனைவி சங்கீதா தொடர்ந்த விவாக ரத்து வழக்கு பற்றி விஜய் ஏதாவது பேசுவார் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர். முந்தைய கூட்டத்தில் அது பற்றி பேசாமல் மவுனமாக கடந்து சென்ற விஜய், இன்று அது பற்றி பேசினார்.''தொண்டர்கள் வருத்தப்படும் அளவுக்கு விவாக ரத்து வழக்கு ஒன்றும் வொர்த் இல்லை. அதை நான் பார்த்துக் கொள்கிறேன்,'' என்று கூறினார் விஜய்.சினிமா தயாரிப்பாளர் வீட்டு திருமணத்துக்கு, நடிகை திரிஷாவுடன் ஜோடியாக விஜய் சென்றது, கேலி, கிண்டல் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், இவ்வாறு அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0