திருச்சி திருநெடுங்களநாதர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி உற்சாகம்
திருச்சி திருநெடுங்களநாதர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி உற்சாகம்
திருச்சி அடுத்துள்ள துவாக்குடி அருகே திருநெடுங்குளத்தில் திருநெடுங்களநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி உள்ளிட்ட வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று காலை 8.24 மணிக்கு சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியானார்.
இதனையடுத்து அருள்மிகு திருநெடுங்களநாதர் திருக்கோயில் திருநெடுங்களம் ஆலயத்தில் சனி பெயர்ச்சியை முன்னிட்டு நவ கிரகங்களுக்கும் நவகிரகங்களில் உள்ள சனீஸ்வரனுக்கும் பால் சந்தனம் தயிர் தேன் பஞ்சாமிர்தம் என 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கலசத்தில் பூஜிக்கப்பட்டு கலச அபிஷேகமும் நடைபெற்றது
சனி பெயர்ச்சியை முன்னிட்டு நவகிரகத்தில் உள்ள சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இன்று பரிகாரம் செய்யப்பட்ட ராசிகள் மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகள் கொண்ட பக்தர்கள் திரளாக ஆலயத்தில் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்து சனிப்பெயர்ச்சி அபிஷேகத்தை கண்டு களித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி வழிகாட்டுதலின்படி, கோவில் அர்ச்சகர்கள் சோமசுந்தரம், ரவி ரமேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்ததை முன்னிட்டு கோவில் முழுவதும் துவாக்குடி மற்றும் திருவெறும்பூர் போலீசாரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0