தஞ்சையில் விஜய்; எத்தனை முறை அறிவுறுத்தியும் வாகனத்தை பின் தொடர்ந்த கூட்டம்
தஞ்சையில் விஜய்; எத்தனை முறை அறிவுறுத்தியும் வாகனத்தை பின் தொடர்ந்த கூட்டம்
சேலம், வேலூரைத் தொடர்ந்து தஞ்சாவூரில் நடைபெறவுள்ள தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பங்கேற்றுள்ளார்.
தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை தமிழக வெற்றி கழகத் தலைவரும் நடிகருமான விஜய் சந்தித்து பேசுகிறார்.
இந்தக் கூட்டத்திற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு காலை 10 மணிக்கு விஜய் வருகை தந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையிலும் தவெக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து தனி கேரவன் மூலம் மாத்தூர் ரிங் ரோடு வழியாக துவாக்குடி சென்று அங்கிருந்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள விழா அரங்கிற்கு பயணித்தார். வழி நெடுகிலும் தவெக தொண்டர்கள் ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகனத்தில் வாகனத்தை அதிவேகத்தில் பின்தொடர்ந்தனர்.
இன்று நண்பகல் 12 மணிக்கு நிர்வாகிகளை சந்திக்கும் விஜய் பிற்பகல் 3 மணிக்கு அங்கிருந்து மீண்டும் திருச்சி நோக்கி புறப்படுகிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
1