பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இடையே மோதல்: இருவருக்கு அரிவாள் வெட்டு: களத்தில் தடியடி நடத்திய காவல் ஆணையர் காமினி

Aug 30, 2025 - 10:02
 0  5
பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இடையே மோதல்: இருவருக்கு அரிவாள் வெட்டு: களத்தில் தடியடி நடத்திய காவல் ஆணையர் காமினி

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இடையே மோதல்: இருவருக்கு அரிவாள் வெட்டு: களத்தில் தடியடி நடத்திய காவல் ஆணையர் காமினி

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஏ ஐ டி யூ சி யை சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்கள் பேருந்து வரும் பின்புற பாதையில் நேற்று இரவு ஆட்டோக்களை நிறுத்தி மறியல் போராட்டம் நடத்தியதால் பேருந்து நிலையம் உள்ளே வரக்கூடிய பேருந்துகள் வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் பேருந்துகள் வெளியே வரும் பாதையில் அனைத்து பேருந்துகளையும் உள்ளே அனுப்பி போக்குவரத்தை சமாளித்தனர். 
ஆட்டோ தொழிலாளர்கள் தங்களுக்கு முறையாக ஆட்டோ நிறுத்துவதற்கான ஸ்டாண்ட் உள்ளிட்டவைகளை அமைத்து தர வேண்டும் என இரண்டு மாதமாக கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் இதுவரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்காததால் இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்தனர். இது குறித்த விபரம் வருமாறு;


திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் அமைப்பதில் தொழிற்சங்கங்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதில் திருச்சி மாநகராட்சி ஆணையர்,
காவல் துறையினர் தொடர் பேச்சுவார்த்தை ஈடுபட்டு உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பின்புறமும் மற்ற தொழிற்சங்கங்களுக்கு பேருந்து நிலையத்தின் முன்புறமும் இடம் ஒதுக்கப்பட்டு ஆட்டோ இயக்க தற்காலிமாக அனுமதிக்கப்பட்டிருந்தது.  பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் இரு தொழிற்சங்கத்தினருக்கு இடையே திடீரென நேற்றிரவு(29.08.2025) கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. இதில் மூவேந்தர் ஆட்டோ தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் வெளியில் இருந்து அடியாட்களை கொண்டு வந்து டாக்டர் கலைஞர் ஆட்டோ தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களை அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமதானப்படுத்தியும் தொடர்ந்து இருவரும் இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த
அருண்குமார், சேக், ராம்குமார் உள்ளிட்டோரை அரசு மருத்துவமனைக்கு 108 அவசர ஊர்தியில் அழைத்துச் சென்றனர். இவர்களை பார்ப்பதற்கு அப்துல் ரகுமான் என்ற ஆட்டோ ஓட்டுனர் எடமலைப்பட்டிபுதூர் அருகே வந்து கொண்டிருக்கும் பொழுது மூவேந்தர் ஆட்டோ தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் அடியாட்களுடன் அவரை ஓட ஓட விரட்டி முகத்தில் வெட்டி தாக்கி உள்ளனர். தகவல் அறிந்த டாக்டர் கலைஞர் ஆட்டோ தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த பொழுது இவர்கள் அனைவரும் தப்பி ஓடினர். 
இந்நிலையில் இது தொடர்பாக
குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என ஒரு தரப்பு ஆட்டோ ஓட்டுநர்கள் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில்
ஒன்று திரண்டு மறியலில் ஈடுபட முயற்சித்தனர். சக ஆட்டோ ஓட்டுநர்கள் பிரச்சினையை ஊர் பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என கூறி வந்த நிலையில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் , திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் வடக்கு சட்டம் ஒழுங்கு ஈஸ்வரன் மற்றும் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஆட்டோ ஓட்டுநர்கள் அங்கும் இங்குமாக தெறித்து ஓடினர். மாநகர காவல் ஆணையர் காமினி களத்தில் இறங்கி  லத்தியை எடுத்து சுழற்றி தடியடி நடத்த ஒட்டுமொத்த போலீசும் லத்தியை சுழற்றியது. உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்களை விரட்டி பிடித்தனர்.


இதனால் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பதட்டம் காணப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் காவல்துறையினர் அங்கும் இங்குமாக ஓடி ஆட்டோ ஓட்டுநர்களை பிடிக்க முற்பட்டதால் வாகன ஊட்டிகளும் பொதுமக்களும் இதை பார்த்து பதட்டம் அடைந்தனர். காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால் சம்பவத்தால் பஞ்சப்பூர் பஞ்சாயத்து ஊராக பரபரப்புடன் காணப்பட்டது.
பஞ்சாப் ஊர் பேருந்து நிலையம் துவக்கி வைத்தது முதல் பல்வேறு தொடர் பஞ்சாயத்துக்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0