செய்தியாளர்கள் மீது தாக்குதல்; பழனியாண்டி எம்எல்ஏவை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Feb 2, 2026 - 18:31
 0  56
செய்தியாளர்கள் மீது தாக்குதல்; பழனியாண்டி எம்எல்ஏவை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

செய்தியாளர்கள் மீது தாக்குதல்; பழனியாண்டி எம்எல்ஏவை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் 

திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகே திருச்சி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கரூர் மாவட்டம், சிவாயம் பகுதியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்கு சொந்தமான குவாரி குறித்து செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் ஜெபாஸ்டினை கண் மூடித்தனமாக கொடூரமாக தாக்கி ஒளிப்பதிவு உபகரணங்களை உடைத்துள்ளனர். 

மேலும், சம்பவ இடத்திற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி வந்து செய்தியாளர்களை தாக்கியதாக தாக்குதலுக்கு உண்டான செய்தியாளர்கள் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். 

மேலும், சமூக ஊடகங்களில் வெளியான ஆடியோவில் எம்எல்ஏவை பார்த்து செய்தியாளர், "அண்ணே உங்களை எனக்கு நல்லா தெரியும் அண்ணே..." என்று கெஞ்சி அடி வாங்கிய அலறல் சத்தமும் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்து, திருச்சி மாவட்ட பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் தனது கட்சியாக இருந்தாலும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும், பத்திரிக்கையாளர்களின் உரிமையைப் பறித்து, குரல்வளையை நெறிக்கும் இந்த செயலை வன்மையாக கண்டிப்பதாக பத்திரிக்கையாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்டனர்.

மேலும், சம்பந்தப்பட்ட ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, அவரது மகன் விமலாதித்தன் மற்றும் செய்தியாளர்களை தாக்கிய குண்டர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செய்தியாளர் சுகுமார் தலைமை தாங்கினார். செய்தியாளர்கள் ஷானு, வளையாபதி, மோகன்ராம், மோகன், சமூக ஆர்வலர்கள் மக்கள் சக்தி இயக்கம் நீலமேகம் தண்ணீர் அமைப்பு, ஆர்கே ராஜா, வையாபுரி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0