விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ; பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம்
விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ; பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. வீடுகள் லேசாக குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இது குறித்த விபரம் வருமாறு ;
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு 9.06 மணி அளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் சாத்தூர், கூமாபட்டி, கிருஷ்ணன் கோவில், செங்குளம் என அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சில நொடிகளுக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வால் வீடுகள் லேசாக குலுங்கியதால் மக்கள் பதறியடித்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கிருஷ்ணன் கோவில், செங்குளம், கம்மாபட்டி, மல்லி ஆகிய ஊர்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்ற போதிலும் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மேற்கண்ட பகுதிகளில் ரிக்டர் அளவுகோளில் 3 புள்ளிகள் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. பொதுவாக இந்தியாவின் சில வடமாநிலங்களில் நில அதிர்வு அவ்வப்போது ஏற்படுவது வழக்கம். ஆனால் தமிழகத்தில் இப்போது நில அதிர்வு ஏற்பட்டுள்ளது பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0