ஸ்ரீரங்கம்- திருச்சி கிழக்கை குறிவைக்கும் மக்கள் நீதி மய்யம்; வேட்பாளர் ரேஸில் எஸ்.ஆர்.கிஷோர்குமாருக்கு முக்கியத்துவம் காட்டும் கமல்

Jan 27, 2026 - 17:36
 0  193
ஸ்ரீரங்கம்- திருச்சி கிழக்கை குறிவைக்கும் மக்கள் நீதி மய்யம்; வேட்பாளர் ரேஸில் எஸ்.ஆர்.கிஷோர்குமாருக்கு முக்கியத்துவம் காட்டும் கமல்

ஸ்ரீரங்கம்- திருச்சி கிழக்கை குறிவைக்கும் மக்கள் நீதி மய்யம்;
வேட்பாளர் ரேஸில் எஸ்.ஆர்.கிஷோர்குமாருக்கு முக்கியத்துவம் காட்டும் கமல்

   

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயல்பாடுகளில் முன்னிலையில் இருக்கும் நிர்வாகிகளில் திருச்சி மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான எஸ்.ஆர்.கிஷோர்குமார் வேட்பாளர் ரேஸில் முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படுகின்றார்.
   வழக்கறிஞரான இவர் அக்கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். அதுமடுமின்றி திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் தேர்தல் மூலம் மட்டுமே நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். மிக அரிதாக எப்போதாவது ஒரு நிர்வாகி அன்னபோஸ்டாக தேர்வு செய்யப்படுவர். அந்த அரிதான தேர்வு பட்டியலில் வழக்கறிஞர் கிஷோர்குமார் தேர்வாகியிருக்கின்றார்.
   சமூக ஆர்வலராக அறியப்பட்ட வழக்கறிஞர் கிஷோர்குமார், தமது வழக்கறிஞர் தொழிலில் நேர்மையான அணுகுமுறையுடன் செயல்பட்டதால் கிஷோர்குமாரை அங்கீரிகரிக்கும் வகையில் வழக்கறிஞர் சங்க பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றார்.   
   இதேபோல் இன்னும் பல பதவிகளில் இருந்த கிஷோர்குமார், சமூக அக்கறையுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இவரின் செயல்பாடுகளால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குட்புக்கில் இடம் பிடித்தார். 
 

 கமல்ஹாசனின் உயரிய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட இவர் மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் இடும் கட்டளைகளை செவ்வனே செய்து, மக்கள் பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியாகவும் போராடி தீர்வு கண்டு, மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து செயல்பாடுகளையும் தனது சொந்த முயற்சியால் பொதுமக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்துள்ளார்.
   மக்கள் நீதி மய்யம் சார்பில் தான் மேற்கொள்ளும் சமூகசேவைகளையும், சமூக வலை தளங்கள் மூலமாக அனைத்து தரப்பு மக்களிடையேயும் பதிய வைக்கும் அளப்பரிய பணியை மேற்கொண்டதால், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இதயத்தில் நீங்கா இடம்பெற்றுள்ளார் வழக்கறிஞர் கிஷோர்குமார்.
   அதன் வெளிப்பாடாக மக்கள் நீதி மய்யத்தின் சிறந்த செயல்பாட்டர்களில் ஒருவரான கிஷோர்குமாருக்காக திருச்சி கிழக்கு மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய 15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியலை கூட்டணி கட்சி தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலினிடம்
கமல்ஹாசன் வழங்கியுள்ளார்.
   கட்சித் தலைவர் கமல்ஹாசன் மற்றும் நிர்வாகிகளிடமும் நன் மதிப்பை பெற்றவரும், மாவட்ட மக்களால் பரவலாக அறியப்பட்டவருமான வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர்குமாருக்கு நிச்சயமாக
2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிட்டும் என்றே அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் ஸ்ரீரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான எஸ்.ஆர்.கிஷோர்குமார் தெரிவிக்கையில்; மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் கிடைக்கும் விதமாக தேர்தல் ஆணையத்திலிருந்து டார்ச் லைட் சின்னத்தை தக்கவைத்து பெற்றுத்தந்த மாநிலங்களவை உறுப்பினரும் கட்சியின் தலைவருக்கு எங்களது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
  தமிழக சட்டமன்றத்தின் மாண்பை குறைக்கும் விதமாக்ச ஆதாய அரசியல் விளம்பரத்திற்காக தொடர்ந்து ஆளுநர் உரையை புறக்கணிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை வன்மையாக கண்டிக்கின்றோம்.
  மக்கள் நீதி மய்யம் தலைவரின் சிந்தனை திட்டமான மகளிருக்கு உரிமைத்தொகை என்பதை கலைஞர் உரிமைத்தொகையாக சிறப்பாக செயல்படுத்தி, மகளிரின் வாவாதாரத்தை சீரிய முறையில் உயர்த்தும் தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்திட இந்திய தேர்தல் ஆணையம் ஆவணம் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றோம்.
  திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எங்களுக்கு ஸ்ரீரங்கம் அல்லது திருச்சி கிழக்கு தொகுதி கிடைக்கும் பட்சத்தில் நாங்கள் கூட்டணியின் வெற்றிக்கு கடுமையாக உழைப்போம். தலைவர் கமலஹாசன் கை நீட்டும் வேட்பாளருக்கு முழுமையாக பாடுபடுவோம். அதேநேரம் மாவட்ட செயலாளராக இருக்கும் நானும் களத்தில் இறங்க விருப்பம் தெரிவித்திருக்கின்றதால், வாய்ப்பு கொடுத்தால், வெற்றிக்கணியை தலைவரிடம் கொண்டு சேர்க்க கடுமையாக பாடுபடுவேன் எனத்தெரிவித்தார்.
முன்னதாக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி இதுவரை பெரிய அளவிலான அழுத்தம் எதையும் திமுக-வுக்கு கொடுக்கவில்லை. கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு தரப்பட்ட ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டுடன் அக்கட்சி திருப்தி அடைந்து விட்டதாக மக்களவைத் தேர்தலின் போது விமர்சனங்கள் எழுந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் இரட்டை இலக்கத்தில் சீட் பெறுவதற்கான முயற்சியில் இருக்கிறது மநீம.
  அதன்படி, கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சென்னை வேளச்சேரி, மயிலாப்பூர், மதுரவாயல், அம்பத்தூர், தாம்பரம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், தியாகராய நகர், திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், மதுரை மத்தி ஆகிய 15 தொகுதிகள் எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தேச பட்டியலை கொடுத்தார். அதிலும், குறிப்பாக, கோவை, சென்னை, திருச்சி கிழ்க்கு, ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும், சொந்தச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம் என் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0