ஹைட்ரோ கார்பன் கிணறு:மன்னார்குடியில் விவசாயிகள் உண்ணாவிரதம்
ஹைட்ரோ கார்பன் கிணறு:மன்னார்குடியில் விவசாயிகள் உண்ணாவிரதம்
தமிழக காவிரி விவசாயிகள் சங்கம், பெரியகுடி போராட்டக் குழு இணைந்து ஆந்திராவைப் போல் பெரும் தீ விபத்தை ஏற்படுத்தும் பெரியகுடி ஹைட்ரோ கார்பன் கிணறை விட்டு ஒஎன்ஜிசி கனரக வாகனங்களை வெளியேற்ற வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடபெற்றது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு கடந்த 2013இல் எதிர்பாராத நிலையில் விடுத்து சிதறியது இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரண்டு கட்ட கருத்துக் கூட்டங்கள் நடத்தப்பட்டு இக்கிணறை திறக்கக் கூடாது. இது தமிழக அரசின் அனுமதி இல்லாமல் திறக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தி தடை விதிக்கப்பட்டது.
இதனை மீறி ஓஎன்ஜிசி கிணறுகளை தோண்ட முயற்சி எடுத்தபோது அதற்கு எதிராக சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் 2015 ல் தொடரப்பட்ட வழக்கில் ஓஎன்ஜிசிக்கு தடை விதிக்கப்பட்டது. இனி காவிரி டெல்டாவில் எந்த ஒரு இடத்திலும் புதிய கிணறுகள் அமைக்கவோ, ஹைட்ரோ கார்பன் மீத்தேன், இயற்கை எரிவாயு,கச்சா எடுப்பதற்கு ஆய்வு செய்யவோ கிணறு தோண்டவோ அனுமதிக்க மாட்டோம்.வெடிவைத்து ஆய்வு செய்யோ அனுமதிக்க மாட்டோம் என மத்திய மாநில அரசுகள் எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை கொடுத்தது. இதனை ஏற்று தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் ஓஎன்ஜிசிக்கு விதித்த விதித்த தடையை நீக்கியது. விரைவில் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2020-ல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. உடனடியாக ஓஎன்ஜிசி கனரக எண்ணெய் துறப்பன இயந்திரங்கள் வெளியேற்றப்பட்டன. 2016க்கு முன் செயல்பாட்டில் இருந்த கிணறுகள் மற்றும் செயல்பட அனுமதிக்கப்பட்டது. மற்ற கிணறுகள் அனைத்தும் தடை விதிக்கப்பட்டு அனைத்து ஓஎன்ஜிசி கனரக இயந்திரங்களும் டெல்டாவை விட்டு வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் தற்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக தமிழக அரசின் கார்ப்பரேட் மோகம் கொண்ட அதிகாரமிக்க ஒரு சிலரின் ஆதரவோடு பெரியகுடி ஹைட்ரோ கார்பன் கிணறை திறப்பதற்கு மறைமுக சதியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனை கண்டிக்கிறோம், உடனடியாக பெரியகுடி ஹைட்ரோ கார்பன் கிணறு அருகே மூடப்பட்ட கிணறை மீண்டும் திறப்பதற்கான முயற்சி மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும். உடனடியாக கனரக துறப்பன இயந்திங்களை வெளியேற்ற வேண்டும். இஸ்மாயில் குழு அறிக்கையை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெரியகுடி கிராமத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு எஸ்.ஆர்.கமலக்கண்ணன் தலைமை ஏற்றார். தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்பு செயலாளர் எஸ்.ஸ்ரீதர் துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் எம்.சுப்பையன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன், தலைவர் ரவிச்சந்திரன், கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் சரவணன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் இராவணன், சமூக செயல்பாட்டாளர்கள் ஏங்கல்ஸ் சோமசுந்தரம், சங்கர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பி.ஆர். பாண்டியன் மீது அவதூறு பிரச்சாரம் செய்யும் வகையில் ஓஎன்ஜிசி தொழிலாளர்கள் என்கிற பெயரில் டெல்டா முழுமையிலும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்ற வேண்டும். அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடும் ஓஎன்ஜிசி தொழிலாளர்கள் மீது வழக்கு தொடர வேண்டும்.
பிஆர்.பாண்டியனுக்கும் குடும்பத்திற்கும் உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0