உயரிய கௌரவம்..! தமிழக காவல்துறையைச் சேர்ந்த 24 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது : திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டிஎஸ்பிக்கு விருது
உயரிய கௌரவம்..! தமிழக காவல்துறையைச் சேர்ந்த 24 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது : திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டிஎஸ்பிக்கு விருது
தமிழக காவல்துறையினருக்கு மத்திய அரசின் சார்பில் ஜனாதிபதி விருது வழங்கப்படுவது இந்திய காவல்துறையின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றாகும். இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு அறிவிக்கப்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான பரிந்துரைகளைப் பெற்று, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் இறுதி செய்து அறிவிப்பு வெளியிடுகிறது. தமிழக போலீசார் இந்த விருதுகளை தொடர்ந்து பெற்று வருவது அவர்களின் சிறப்பான பணியையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
இந்த விருதுகள் முக்கியமாக இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒன்று வீரத்திற்கான விருதுகள், மற்றொன்று சிறப்பான மற்றும் தகுதி வாய்ந்த சேவைக்கான விருதுகள்.
நீண்டகால சிறப்புப் பணி, திறமையான நிர்வாகம், குற்றக் கட்டுப்பாடு, சமூக நலத் திட்டங்கள், போதைப்பொருள் தடுப்பு, சைபர் குற்ற விசாரணை போன்ற துறைகளில் தொடர்ச்சியான உயர்தர சேவைக்காக வழங்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் உயர் அதிகாரிகள் மற்றும் அனுபவமிக்க அதிகாரிகளுக்கு கிடைக்கின்றன.
அந்தவகையில், சிறப்பாக பணியாற்றிய தமிழக காவல்துறையைச் 3 அதிகாரிகளுக்கு தகைசால் விருது ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 21 காவல்துறை அதிகாரிகளுக்கு மெச்சத்தக்க பணிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, குடியரசு தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகள் தமிழக காவல்துறை நிர்வாகப் பிரிவு ஐஜி மகேஸ்வரி, சென்னை புனித தோமையர்மலை ஆயுதப்படை (3) துணை ஆணையர் அன்வர் பாஷா, சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் குமரவேலு ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன.
மெச்சத் தகுந்த பணிக்கான காவல் விருதுகள் கோவை மேற்குமண்டல ஐஜி சரவண சுந்தர், சேலம் மாநகர காவல் ஆணையர் அனில்குமார் கிரி, ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 5-ம் அணி தளவாய் மணிவர்ணன், சென்னை காவல் ஊர்காவல்படை கூடுதல் காவல் துணை ஆணையர் அமுல்தாஸ், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், காவல் துணை கண்காணிப்பாளர் பேசில் சீனிவாசன், சென்னை தகவல் தொடர்பு துணை கண்காணிப்பாளர் தேவராஜன், திருப்பூர் மாநகரம் கே.வி.ஆர். நகர் சரகம் உதவி ஆணையர் ஜான், ஆவடி காவல் ஆணையரக நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் மணிவண்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
மேலும் சென்னை தலைமை அலுவலகம் வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவு காவல் ஆய்வாளர் ஜானகி, ஆவடி காவல் ஆணையரக பூந்தமல்லி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, கோவை சிறப்பு புலனாய்வுப்பிரிவு காவல் ஆய்வாளர் காளீஸ்வரி, வேலூர் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் விஜய், தஞ்சாவூர் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவுகாவல் ஆய்வாளர் இலக்குமணன், தாம்பரம் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை காவல் ஆய்வாளர் ரகுநாதன், சென்னை க்யூ பிரிவு குற்றப்புலனாய்வுதுறை காவல் ஆய்வாளர் மோகன், திருநெல்வேலி மாநகரம், நகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பாண்டி முத்துலட்சுமி, சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை (1) காவல் ஆய்வாளர் ஆனந்தி, சென்னை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் சந்திரா, சென்னையில் உள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை காவல் ஆய்வாளர் செந்தில் குமார், சென்னையில் உள்ள பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளர் முருகன் என 21 பேருக்கு மெச்சத் தகுந்த பணிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0