அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் கட்ட விசாரணை துவக்கம்; நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

Jan 24, 2026 - 13:54
 0  62
அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் கட்ட விசாரணை துவக்கம்; நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அமைச்சர் கே என் நேரு மீது முதல் கட்ட விசாரணை துவக்கம்; நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்  

அமலாக்​கத்​ துறை குற்​றச்​சாட்டு தொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத்​துறை முதல்கட்ட விசா​ரணை நடத்தி வரு​வ​தாக உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தரப்​பில் தகவல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழக நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யில், உதவிப் பொறி​யாளர், இளநிலைப் பொறி​யாளர், சுகா​தார ஆய்​வாளர் உள்​ளிட்ட 2,538 பணி நியமனங்​களுக்கு கோடிக்​கணக்கில் லஞ்​ச​மாக பெறப்​பட்​டுள்​ள​தாக​வும், இதுதொடர்​பாக வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரிக்க டிஜிபி-க்கு உத்​தர​விடக்​கோரி மதுரை திரு​மங்​கலத்​தைச் சேர்ந்த ஆதி​நா​ராயணனும் அதி​முக எம்.பி. இன்​பதுரையும் மனு​ தாக்ல் செய்திருந்தனர்.அதில் அமைச்​சர் நேரு, அவரது குடும்பத்​தினர் மீது வழக்​குப்​ப​திந்து லஞ்ச ஒழிப்​புத் துறை விசா​ரிக்க கோரி​யிருந்​தனர்.

இந்த வழக்​கு​கள் மீதான விசா​ரணை தலைமை நீதிபதி எம்​.எம்​. ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசாரணைக்கு வந்​தன. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன், டிஜிபிக்கு அமலாக்​கத் ​துறை அனுப்​பிய கடிதத்​தின் அடிப்​படை​யில் லஞ்ச ஒழிப்​புத்​துறை முதல்கட்ட விசா​ரணை நடத்தி வரு​வ​தாகக் கூறி அதுதொடர்​பான அறிக்​கையை தாக்​கல் செய்​தார்.

மேலும் டிஜிபி தரப்​பில் பதில்​மனு தாக்​கல் செய்​ய​வும் அவகாசம் கோரப்​பட்​டது. அதையடுத்து நீதிப​தி​கள், இதுதொடர்​பாக ஜன.28-க்​குள் பதில்​மனு தாக்​கல் செய்ய வேண்​டும் என உத்​தர​விட்டு வி​சா​ரணை​யை தள்​ளி​ வைத்​துள்​ளனர்​.

முன்னதாக, கே.என்.நேரு மற்றும் மற்ற மூத்த அமைச்சர்களை டார்கெட் செய்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் அரசியல் செயல்பாடுகளை தடுக்கலாம் என்றும், தேர்தல் பணிகளை முடக்கலாம் என்றும் மத்திய அரசு கருதுவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 சட்டமன்ற தேர்தலில் டெல்டா மண்டல பொறுப்பாளராக கேஎன் நேரு செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரை அமலாக்கத்துறை சோதனையில் சிக்க வைத்தால், அந்த பகுதியில் NDA கூட்டணி எளிதாக வெற்றி பெறலாம் என்றும் இந்த வேலைகள் நடப்பதாக கே என் நேருவின் விசுவாசிகள் தெரிவிக்கின்றனர்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0