பிப்.12 பொது வேலைநிறுத்தம், மறியல்; தமிழகத்தில் மாபெரும் வெற்றிபெறச் செய்வோம்- திருச்சியில் தொழிற்சங்கங்கள் உறுதி
பிப்.12 - பொது வேலைநிறுத்தம், மறியல் ; தமிழகத்தில் மாபெரும் வெற்றிபெறச் செய்வோம்- திருச்சியில் தொழிற்சங்கங்கள் உறுதி
மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும்vஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப்ரவரி 12-ந் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
இதையொட்டி நேற்று மாலை திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் ஆயத்த மாநில மாநாடு நடைபெற்றது.
மாநாட்டிற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த (எல்.பி.எப்) அகில இந்திய தலைவர் கி.நடராஜன் தலைமை தாங்கினார். சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.சவுந்தரராஜன், மாநில தலைவர் ஜி.சுகுமாறன், மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், ஏஐடியுசி தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி, எச்.எம்.எஸ் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணி, ஐ.என்.டி.யூ.சி மாநில துணைத்தலைவர் டி.வி.சேவியர், ஏ.ஐ.சி. சி.டி.யு மாநில பொதுச்செயலாளர் க.ஞானதேசிகன், எல்.எல்.எப் மாநில பேரவை அமைப்பாளர் க. பேரறிவாளன், யூ.டி. யூ.சி மாநில பொதுச் செயலாளர் அ.சேக்கிழார், எஸ்.கே.எம் மாநில ஒருங்கிணைப்பாளர் க.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாநில துணை செயலாளர் மாரியப்பன், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன், ஏ.ஐ.யூ.டி.சி வி. சிவக்குமார், டி.யு.சி.சி எஸ்.மாயாண்டி, எம்.எல்.எப் இரா. அந்திரிதாஸ், டபிள்யூ.பி.டி.யு.சி சம்பத் ஆகியோர் பேசினர்.
திருச்சி மாவட்ட நிர்வாகிகள் எல்.பி.எப் குணசேகரன், சி.ஐ.டி.யு ரெங்கராஜன், ஏ.ஐ.டி.யு.சி சுரேஷ், எஸ்.கே. எம் சிவசூரியன், ஏ.ஐ.சி.சி.டி.யு அருண்குமார், எச்.எம். எஸ் ஞானதுரை, ஐ.என்.டி.யு.சி வெங்கட் நாராயணன், எல்எல்எப் விஜய் பாலு, யு.டி.யு.சி சிவசெல்வன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆயத்த மாநாட்டு கூட்டத்தில் தலைமை உரை ஆற்றிய தொமுச நடராஜன்; திருத்தப்பட்டுள்ள தொழிலாளர் சட்டத் தொகுப்பில் ஊதிய வன்முறையில் குழப்பம் நிலவுகிறது. மத்திய அரசு குழு கூறுவதை மாநில அரசு கேட்டு நடக்க வேண்டும் என்கிறது. அபாயகரமான இந்த சட்டத் தொகுப்பு அவசரகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தமிழகத்தில் அமல்படுத்தாமல் தொழிற்சங்கங்கள் தடுத்து நிறுத்தியுள்ளன. பாஜக தலைமையிலான அரசு தமிழகத்தில் அமைந்தால் ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டங்களை தமிழகத்தில் எளிதாக அமல்படுத்தி விடும். இதை யாரும் தடுக்க முடியாத சூழல் உருவாகும்.
எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றார்.
விவசாயிகள் சங்க தலைவர் கே. வி. இளங்கீரன் பேசுகையில்; தனது பணக்கார நண்பர்களுக்காக பிரதமர் மோடி இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். தனியார்மயத்தை நோக்கி இந்த நாடு போய்க் கொண்டிருக்கிறது.
இவற்றை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும், மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்டம் மற்றும் விதை சட்டம் தொழிலாளர் வதைக்கும் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், மத்திய அரசு விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு புதிய சட்டத்தால் எவ்வாறு பாதிப்பு ஏற்படும் என்பதை விளக்கி பேசியவர், வரும் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றி பெற வைக்க நாம் அனைவரும் ஒன்று திரண்டு நிற்போம் என்றார்.
ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து பிப்ரவரி 12-2026 அன்று நடைபெற உள்ள, அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கான, ஆயத்த மாநில மாநாட்டு தீர்மானங்கள் பின்வருமாறு :
ஒன்றிய மோடி அரசு தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, பொதுமக்கள் விரோத, மற்றும் ஜனநாயக விரோத போக்குகளை கைவிட வேண்டும்.
நூற்றாண்டு காலம் போராடி, இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பும் -பின்பும், உருவாக்கப்பட்ட 44 தொழிலாளர் சட்டத்தில் 29 சட்டங்களை 4 தொகுப்பு சட்டங்களாக்கியதன் மூலம், 80 சதவிகித தொழிலாளர்கள் சட்ட வரம்புக்கு வெளியே தள்ளுவதோடு, இந்நாட்டு - பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கு சாதகமாகவும், இலகுவாக வணிகம் செய்வதை நோக்கமாக கொண்ட, சட்டத் தொகுப்புகளை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்.
விவசாயிகளை பாதிக்கும், விதை சட்ட முன் வடிவை கைவிட வேண்டும். விளைப்பொருட்களுக்கு உரிய ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
மின்சார உற்பத்தி - விநியோகம் தனியார் மயமாக்கும் நோக்கோடும், விவசாயிகள், விசைதறியாளர்கள், ஒரு விளக்கு பயன்பாட்டாளர், என அனைத்து தரப்பினரையும், பாதிக்கும் மின்சார சட்ட திருத்த சட்ட முன்வடிவை திரும்பப்பெற வேண்டும்.
மகாத்மா காந்தி, ஊரக வேலை உறுதி சட்டத்திலிருந்து, தேச தந்தை மகாத்மா காந்தி பெயரை நீக்கியதோடு, ஒன்றிய அரசு, தனது பங்களிப்பை குறைத்து, மாநில அரசுகளுக்கு நிதிச்சுமையை கூடுதலாக்குவதை கண்டிப்பதுடன், மீண்டும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை சீர் குலைப்பதை கண்டிப்பதுடன், மீண்டும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி சட்டத்தை, முன்பிருந்த நிலையில் செயல்படுத்த வேண்டும்.
காப்பீட்டு துறையில், 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை, கைவிட வேண்டும் .
அணு மின் நிலையம் மூலம் தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்க அனுமதியளித்த அணு மின் உற்பத்தி மசோதா சாந்தி - 2025 ஐ திரும்பப்பெற வேண்டும்.
மின்சார வினியோகத்தை முற்றிலும் தனியாரிடம் ஒப்படைக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதா 2025 ஐ ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்.
ஒன்றிய அரசு, கடந்த 21ந் தேதி அறிவித்த லேபர் கோடு (தொழிலாளர் நல சட்ட திருத்தம்)அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, தொமுச மாவட்ட செயலாளர் ஜோசப் நெல்சன் வரவேற்புரை ஆற்றினார்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0