ஓ.பி.எஸ். தலைமையில் இன்றளவும் பயணிக்கிறேன்; தி.மு.க.வில் இணைவதாக வெளியான தகவல் தவறானது- முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
ஓ.பி.எஸ். தலைமையில் இன்றளவும் பயணிக்கிறேன்; தி.மு.க.வில் இணைவதாக வெளியான தகவல் தவறானது- முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
திருச்சியை பூர்வீக திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவரும், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் திருச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைச்சராக்கப்பட்ட வெல்லமண்டி நடராஜன் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு மாறினார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று திமுகவில் ஐக்கியமானார். இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மறுத்துள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் வெல்லமட்டி நடராஜன் கூறியதாவது:-
சென்னையில்
தி.மு.க.வில் நான் இணைவதாக வந்த தகவல் தவறானது.
நான் சென்னை செல்லவில்லை. திருச்சியில் மகன், மருமகள், பேரக் குழந்தைகளுடன் இருக்கிறேன்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையை ஏற்று இன்றளவும் பயணித்து வருகின்றேன்.
அவர், எந்த முடிவு எடுத்தாலும் அது ஆணித்தரமான நிரந்தரமான முடிவாக இருக்கும் என கருதுகிறேன்.
கூட்டணி குறித்து கருத்து சொல்லும் பெரிய இடத்தில் நான் இல்லை. நான் ஒன்றும் தலைவர் கிடையாது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைவதாக வந்த தகவலை நானும் பத்திரிக்கை படித்து தான் தெரிந்து கொண்டேன். அது பற்றி அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை என வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று மாலை ஓபிஎஸ் திருச்சி விமான நிலையம் வந்தார் அவரை விமான நிலையத்தில் வரவேற்று அவருடன் பயணித்த வெல்லமண்டி நடராஜன், ஓபிஎஸ் எங்கு செல்கிறாரோ அங்கேயே செல்வேன் என தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0