பஞ்சப்பூரில் எனக்கு 300 ஏக்கர் நிலம் இருந்தால், அதனை அரசோ அல்லது மக்களோ எடுத்துக் கொள்ளலாம் - திருச்சியில் கே என் நேரு
பஞ்சப்பூரில் எனக்கு 300 ஏக்கர் நிலம் இருந்தால், அதனை அரசோ அல்லது மக்களோ எடுத்துக் கொள்ளலாம் - திருச்சியில் கே என் நேரு
என்னுடைய சொத்து மதிப்பு உயர்த்துவதற்காக தான் பஞ்சப்பூரில் பேருந்து நிலையம் கொண்டுவரப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். எனக்கு பஞ்சப்பூர் பகுதியில் 300 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறியுள்ளார் அப்படி 300 ஏக்கர் நிலம் அப்பகுதியில் இருந்தால் அதை அரசு எடுத்துக் கொள்ளலாம். பழனிச்சாமி கூட அதை எடுத்து கொள்ளலாம். பொதுமக்களுமே அதை எடுத்துக் கொள்ளலாம். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்
அவரைப் போலவே எங்களையும் அவர் நினைத்து விட்டார். சென்னையில் மழை பெய்து ஒரு மணி நேரத்திலேயே அனைத்து இடங்களிலும் நீர் வடிந்துவிட்டது மழை நீர் எங்கும் தேங்கவில்லை. ஒரே இடத்தில் 20 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்யும் பொழுது அந்த இடத்தில் தண்ணீர் தேங்கும் மழை நின்ற பின்பு தான் அது வடியும். இயற்கையை யாராலும் வெல்ல முடியாது. மழை பெய்து முடிந்து பத்து நாட்கள் வரை தண்ணீர் தேங்கி இருந்த காலம் உண்டு தற்பொழுது இரண்டு மணி நேரத்தில் தண்ணீர் வடிந்து விடுகிறது. மழைக்குப் பின் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்வர் குடும்பத்தோடு நான் இணக்கமாக இருப்பதாக எடப்பாடி பேசி உள்ளார். அவர்களோடு எப்பொழுது சண்டை விட்டேன் அவர்தான் எங்கள் கட்சிக்கு தலைவர் நாங்கள் அவரோடு இணக்கமாகத்தான் செல்வோம். எடப்பாடி பழனிச்சாமி தன்னோடு இணக்கமில்லாதவர்களை அருகில் வைத்துக் கொள்வதில்லை தங்கமணியை ஒதுக்கி வைத்து விட்டார். முதல்வரோடு இணக்கமாகத்தான் இருக்கிறோம் என எடப்பாடி எனக்கு சர்டிபிகேட் கொடுத்தது மகிழ்ச்சி தான். எடப்பாடி பழனிச்சாமி பெருவாரியாக தோல்வியை தான் தழுவுவார் திமுக தான் வெற்றி பெறும். தமிழக அரசின் கொள்கை இரு மொழி கொள்கைதான் மும்மொழி கொள்கையை மத்திய அரசு எவ்வளவு கட்டாயம் ஆக்கினாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார். க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0