எங்களுக்குள் பங்காளி சண்டை தான் : விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை : அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன்

Jan 21, 2026 - 10:50
 0  38
எங்களுக்குள் பங்காளி சண்டை தான் : விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை : அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன்

எங்களுக்குள் பங்காளி சண்டை தான் : விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை : அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். பின்னர் தாம் அதிமுக பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார்.

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கூட்டணியை பலப்படுத்துவது, தேர்தல் வாக்குறுதி தயாரிப்பது, தொகுதி பங்கீடு என அரசியல் கட்சிகளின் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 23ம் தேதி தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார்.

இந்த பிரசாரத்தின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெறும் அனைத்து தலைவர்களையும் மேடையேற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில் தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணி நிலைப்பாடு குறித்து மௌனம் காத்தன.

இந்நிலையில் பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஸ் கோயல் இன்றைய தினம் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் தேமுதிக மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்றைய தினம் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி டி வி தினகரன், தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவதற்க்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறோம். எங்களுக்குள் பங்காளி சண்டை தான், விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை, பழைய விஷயங்களை நினைத்துக் கொண்டு கட்சி மற்றும் தமிழ்நாட்டு நலனை பின்னுக்கு தள்ளி விடக்கூடாது, ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமர்த்துவதற்கு தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0