மாணவர்கள் அண்ணல் அம்பேத்கரின் சுய புத்தகத்தை படிக்க வேண்டும்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Jan 12, 2026 - 18:16
 0  1
மாணவர்கள் அண்ணல் அம்பேத்கரின் சுய புத்தகத்தை படிக்க வேண்டும்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மாணவர்கள் அண்ணல் அம்பேத்கரின் சுய புத்தகத்தை படிக்க வேண்டும்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

 

திருவெறும்பூர் அருகே பெல் பாய்லர் ஆலையில் பணிபுரியும் ஊழியர்களின் நற்சார் அமைப்பு மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிட நலத்துறை சார்பாக பாய்லர் ஆலை வளாகத்தில் உள்ள எம்டி அரங்கில் அரசியலமைப்பு தின விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம் மற்றும் போட்டிகள் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.

இந்த கருத்தரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது; 76 ஆண்டுகளைத் தாண்டி 77 ஆம் ஆண்டில் நாம் இந்த அரசியலமைப்பு தினத்தை கொண்டாடுவது நமக்கான பெருமை. மேலும், சமத்துவ நாளாக இருந்தாலும், சமூக நீதி நாளாக இருந்தாலும் அதை தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளாக நாம் கொண்டாடுவது நமக்கான பெருமை. குறிப்பாக 2025 ஆம் ஆண்டு என்னால் மறக்க முடியாத ஆண்டு என்று நான் சொல்வது ஏன் என்றால் முதல்வர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, லண்டன் மாநகரத்திற்கு நான் சென்ற பொழுது அங்கு இருந்த தமிழ் சங்கத்தினரிடம் நான் வைத்த இரண்டே கோரிக்கை என்னவென்றால் ஒன்று அண்ணல் அம்பேத்கர் தங்கி படித்த அந்த வீட்டை நான் பார்க்க வேண்டும், மற்றொன்று காரல் மார்க்ஸ் அவர்களுடைய நினைவிடத்தை பார்க்க வேண்டும் என்று தான் நான் கோரிக்கை வைத்தேன். தமிழ்நாட்டிலிருந்து ஒருவன் கோட் அணிந்து தைரியமாகவும், வெளிப்படையாகவும் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் பேசினான் இந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்றால் அதற்கு முழு காரணம் அண்ணல் அம்பேத்கர் தான். எனது இந்த துறைக்கான பெருமை என்னவென்றால் உலகத்திலேயே அண்ணல் அம்பேத்கரின் உண்மை புத்தகம் நமது சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் உள்ளது தான். இதில் தமிழர் ஒருவரின் கையெழுத்து இடம் பெற்றுள்ளது. அதைவிட சிறப்பு வேறொன்றுமில்லை. 

எனவே, மாணவச் செல்வங்கள் ஆகிய நீங்கள் சென்னைக்கு வரும்போது ஒருமுறையாவது கன்னிமாரா நூலகத்திற்கு வந்து அண்ணல் அம்பேத்கரின் சுய புத்தகத்தை படிக்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சட்டமன்றத்திலேயே சட்டத்துறை அமைச்சராக இருந்த பொழுது பெண்களுக்கு சொத்துரிமைகள் சமபங்கு வழங்க வேண்டும் என கூறினார். அப்பொழுது அதை ஏற்க மறுத்து ஓட்டெடுப்பு எடுக்கப்பட்டது, அதில் தோல்வி அடையவே, இதற்காக ஒருவன் வருவான் நிச்சயம் இது நடக்கும் என்று கூறினார்.

அப்படி 1989 ல் வந்தவர் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவர் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்று சட்டத்தை இயற்றி அண்ணல் அம்பேத்கரின் ஆசையை நிறை வேற்றினார். இது போல் தான் அவரது வழியில் வந்த தமிழக முதல்வர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பெண்களுக்கான விடியல் பயணம், கலைஞர் உரிமைத்தொகை புதுமைப்பெண் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார் என பேசினார்.

இந்த விழாவில் நற்சார் அமைப்பின் செயலாளர் சிவானந்தன், திருச்சி மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ரஞ்சித் உட்பட பெல் பாய்லர் ஆலை ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0