பொங்கல் விழாவில் கிரிக்கெட் போட்டி : பரிசுகள் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்
எல்லக்குடி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 25 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி : பரிசுகள் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்
எல்லக்குடி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 25 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகு உற்சாகமாக திருச்சி ரயில் நகர் KIA's TRUF-ல் நடைபெற்றது.
பொங்கல் விழாவை முன்னிட்டு டர்ப்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்து கிரிக்கெட் விளையாடினார் அமைச்சர் அன்பில் மகேஷ். பின்னர், பொங்கல் விழாவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
பொங்கலை முன்னிட்டு கிரிக்கெட் போட்டியானது 09,10,11/9/2026 தேதிகளில் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கீழ்க்கண்டவாறு பரிசுகள் வழங்கப்பட்டது.
முதல் பரிசு 30,000-மும், இரண்டாம் பரிசு 20,000-மும், மூன்றாம் பரிசு 12,000-ம், சிறப்பு பரிசு 15,000-ம் வழங்கி கோப்பை கொடுத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0