டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரான விஜய்:10 கேள்விகளை முன் வைக்க இருக்கும் சி.பி.ஐ: புஸ்லி ஆனந்த் மிஸ்ஸிங் 

Jan 12, 2026 - 11:38
 0  35
டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரான விஜய்:10 கேள்விகளை முன் வைக்க இருக்கும் சி.பி.ஐ: புஸ்லி ஆனந்த் மிஸ்ஸிங் 

டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரான விஜய்:10 கேள்விகளை முன் வைக்க இருக்கும் சி.பி.ஐ: புஸ்லி ஆனந்த் மிஸ்ஸிங் 

 

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் காலை 11 மணியளவில் விஜய் ஆஜராகியுள்ளார்.

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கடந்த நவம்பர் மாதம் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திலும் கடந்த மாதம் விசாரணை நடத்தப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக த.வெ.க தலைவர் விஜயையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று (ஜனவரி 12) காலை சுமார் 11 மணியளவில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவுள்ளார். இதற்காக சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து 7 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இவருடன் த.வெ.க நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் செல்வதாக கூறப்படுகிறது.

விஜய் டெல்லி வருவதையொட்டி அவருடைய ரசிகர்களும், த.வெ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் டெல்லிக்கு செல்ல முடிவு செய்து புறப்பட்டு சென்றனர். இதனால் சிபிஐ அலுவலகம் முன் மற்றும் விஜய் வரும் பாதையில் பெரும் கூட்டம் திரளும் என எதிர்பார்க்கப்பட்டு, முன்னெச்சரிக்கையாக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லி போலீசார் செய்துள்ளனர்.

 விஜய்யிடமும் சி.பி.ஐ அதிகாரிகள் 10 கேள்விகளை முன் வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய்யுடன், தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், விஷ்ணு ரெட்டி, ஜெகதீஷ் பழனிசாமி, சி.ராஜமோகன், நயீம் ஆகியோர் தனி விமானத்தில் டெல்லி சென்றுள்ளனர்.

 புஸ்லி ஆனந்த் மிஸ்ஸிங் ஆகியுள்ளார். விஜய்யுடன் சென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் டெல்லிக்கு அவர் சற்று முன் வரை வரவில்லை.

 த.வெ.க. 2-ம் கட்ட தலைவர்களிடம் டெல்லியில் சி.பி.ஐ. 3 நாள் விசாரணை நடத்தியதுபோல் விஜய்யிடமும் 2 நாள் விசாரணை நடத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0