திராவிட பொங்கல்: சைக்கிள் ஓட்டி அசத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்
திராவிட பொங்கல்: சைக்கிள் ஓட்டி அசத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்
திருச்சி மாநகர திமுக சார்பாக தலைமைக் கழக அறிவுறுத்தலின்படி திராவிடப் பொங்கல் சமூக நீதிக்கான திருவிழாக் கொண்டாட்டமாக திருச்சியில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு நிகழ்வாக மாபெரும் சைக்கிள் போட்டி மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் நடைபெற்றது.
திருச்சியில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வந்த நிலையில், இந்தப் போட்டியை திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்து, பரிசுகள் வழங்கி சிறப்பித்ததோடு சாரல் மழையில் தானும் சிறிது தூரம் சைக்கிள் ஒட்டி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி மகிழ்வித்தார்.
சைக்கிள் போட்டிகள் கீழ்கண்ட வயதினருக்கு ஆண்களுக்கு 18 வயது முதல் 35 வயது வரை, 36 வயது முதல் 65 வயது வரை, பெண்கள் 18 வயது முதல் 35 வயது வரை, 36 வயது முதல் 65 வயதிற்கு உட்பட்ட பிரிவினருக்கு போட்டிகள் நடைபெற்றது.
முதல் பரிசு ரூபாய் பத்தாயிரம், இரண்டாவது பரிசு 7500, மூன்றாவது பரிசு 5000 என போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாநகர திமுக நிர்வாகிகள் நூர்கான், தமிழ்செல்வம், சந்திரமோகன், பொன்செல்லையா, சரோஜினி, பகுதி கழகச் செயலாளர் பாபு மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பகுதி கழகச் செயலாளர்கள் வட்டக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0