திராவிடர் கழக மாநில சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் சித்தார்த்தன் காலமானார் : அனைத்துக் கட்சியினர் அஞ்சலி
திராவிடர் கழக மாநில சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் சித்தார்த்தன் காலமானார் : அனைத்துக் கட்சியினர் அஞ்சலி
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த திராவிடர் கழகத்தின் மூத்த முன்னோடி பெரியார் பெருந்தொண்டர் மறைந்த டாக்டர் எஸ்.எஸ்.முத்து என்பவரின் மகன் வழக்கறிஞர் சித்தார்த்தன் (54) நேற்று ஜன10, மதுரையில் சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.
மதுரையில் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டிருந்த திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தகவல் அறிந்து உடனடியாக மறைந்த வழக்கறிஞர் சித்தார்த்தன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மீளா துயரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்தார். அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்குப் பின்பு நேற்று மாலை 7.30 மணிக்கு திருச்சி ஸ்ரீரங்கம் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. இன்று மறைந்த சித்தார்த்தன் உடலுக்கு திராவிட கழக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி இரங்கல் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்திற்கு மாவட்ட தி.க தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார், தி.க மாநில பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி, தஞ்சை மாவட்ட தி.க தலைவரும் வழக்கறிஞருமான அமர்சிங் , திராவிடர் விடுதலைக் கழகத்தின் பிரச்சார செயலாளர் சீனி விடுதலை அரசு , தி.க மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், வழக்கறிஞர் கங்கைசெல்வன், வழக்கறிஞர் பூவை. புலிகேசி, வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் கென்னடி, திராவிடர் கழக மாநில மகளிர் அணி செயலாளர் அம்பிகா கணேசன், வழக்கறிஞர் மாரிமுத்து, வழக்கறிஞர் கணேசன், செல்வம், துரை அருண், விடுதலை- வாசகர் வட்ட செயலாளர் வழக்கறிஞர் ஹரி, மனோகர் (தி.வி.க) ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர். பின்னர் மாநில மாணவர் அணி துணை செயலாளர் அறிவிச்சுடர், மாவட்ட செயலாளர் மகாமணி, ஸ்ரீரங்கம் நகர தலைவர் கண்ணன், செயலாளர் முருகன், துணைச் செயலாளர் அண்ணாதுரை மோகன், மாவட்ட காப்பாளர் நற்குணம் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் கனகராஜ், சங்கிலி முத்து , கல்பாக்கம் ராமச்சந்திரன், அசோகன் பேபி, மாவட்ட மகளிர் அணி சாந்தி, விஜயராகவன் விடுதலை செல்வம், ஜெயராஜ் , கௌதமன், விடுதலை - செந்தமிழினியன், திருச்சி மற்றும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள், திராவிடர் கழகத் தோழர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அவரது இல்லத்தில் இருந்து அவரது இறுதி ஊர்வலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0