திருச்சியில் மாநில அளவிலான பிம்ஸ் அபாகஸ் போட்டி; 160 மாணவர்களுக்கு பட்டமளிப்பு
திருச்சியில் மாநில அளவிலான பிம்ஸ் அபாகஸ் போட்டி;
160 மாணவர்களுக்கு பட்டமளிப்பு
திருச்சியில் மாநில அளவிலான பிம்ஸ் அபாகஸ் போட்டி மத்தியப்பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி, சென்னை, தஞ்சை, நாகை, கரூர், சேலம், கோவை, புதுக்கோட்டை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
5 வயது முதல் 12 வயதுடைய மாணவர்களுக்கான பிம்ஸ் அபாகஸ் போட்டியை திருச்சி கலைக்காவேரி கலைக்கல்லூரி பேராசிரியர் சதீஷ்குமார் வினாத்தாள் கொடுத்து துவக்கி வைத்தார். 5 அமர்வுகளாக நடைபெற்ற இந்தப்போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டனர். காலை துவங்கிய போட்டிகளின் முடிவுகள் மாலை 3.30 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், ஏ.பி.சி.மருத்துவமனை மருத்துவர் அலீம், சென்னை ஜே.கே.சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பொறியாளர் சிவராமகிருஷ்ணன், திருச்சி சேவை குழும இயக்குனர் சேவை கோவிந்தராஜ், பேராசிரியர் சதீஷ்குமார், திருச்சி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் செந்தமிழினியன் மற்றும் சண்முகவடிவேல், ராபர்ட் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினர். அபாகஸ் போட்டியில் பங்கெடுத்த மாணவர்கள் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிம்ஸ் அபாகஸ் கல்வி குழுமத்தின் இயக்குநர் ஏகே.சரவணன் மற்றும் இணை இயக்குநர் மகேஸ்வரி சரவணன் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் திறம்பட செய்திருந்தனர்.
அபாகஸ் குறித்து பிம்ஸ் கல்வி குழுமத்தின் இயக்குநர் சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; பிம்ஸ் அபாகஸ் பயிற்சி மையம் கடந்த 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தஞ்சையை மையமாக வைத்து 2 கிளைகளுடன் தொடங்கப்பட்ட இந்த மையம் தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 30 கிளைகளுடன் செயல்பட்டு வருகின்றது.
வழங்கப்படும் பயிற்சிகள்; பிம்ஸ் அபாகஸ் பயிற்சி மையத்தில் 5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, 8 நிலைகளில், ஒவ்வொரு நிலைக்கும் 4 மாதங்கள் என்ற அடிப்படையில், 3 ஆண்டுகள் அபாகஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியின் மூலம், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என 4 முறைகளிலும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பயிற்சி கொடுக்கப்படுகின்றது.
அபாகஸ் பயிற்சியை மேம்படுத்த, கணினிப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளுக்கு கவனிக்கும் திறன் (Attention Skill), நியாபகத்திறன்(Memory Skill), கேட்க்கும் திறன் (Listening Skill), வேகம் மற்றும் துல்லியம் (Thinking Speed & Accuracy), இலக்கை அடையும் வேகம்(Goal Achieving Speed) போன்ற திறன்கள் மேம்படுத்தப்படுகின்றன.
இந்தத் திறன்கள் அனைத்தும், ஒருங்கிணைந்த மாணவர்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தும்.
இதன் மூலம் குழந்தைகள் அவர்களது பள்ளிப் பாடங்களிலும் சிறப்பான ஆற்றலையும், தனித்துவத்தையும் வெளிப்படுத்துகின்றனர். எதிர்காலத்தில் திறனறிவுத்தேர்வு (Aptitude) மற்றும் போட்டித்தேர்வுகளிலும் வெற்றிபெற அபாகஸ் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. மேலும், அபாகஸ் பயிற்சியின் மூலம் வலது மற்றும் இடது மூளைக்கான பயிற்சி தூண்டுதல் ஏற்படுவதால் மாணவர்களின் கூர்மைத்திறன் மேம்படுகின்றது.
பிம்ஸ் அபாகஸ் பயிற்சியின் முதன்மைப் பார்வை(Vision) என்னவென்றால், பயிற்சி பெறும் மாணவர்கள் எவ்வளவு அறிவையும், ஞானத்தையும் பெற முடியுமோ அவ்வளவு அறிவையும், ஞானத்தையும் முழுமையாக மாணவர்களை பெற வைப்பதே பிம்ஸ் அபாகஸ் பயிற்சி மையத்தின் நோக்கமாக அமைந்துள்ளது என்றார் பயிற்சி மையத்தின் நிறுவனர் சரவணன்.
முன்னதாக, பிம்ஸ் அபாகஸ் மையத்தில் மூன்றரை ஆண்டு பயிற்சி முடித்த சுமார் 160 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அபாகஸ் என்றால் என்ன? அபாகஸ் என்பது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பாக சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கணித முறை. இதன் மூலம் கடினமான கணக்குகளுக்கும் எளிதாக விடை காண முடியும். இதில் மணிச்சட்டத்தில் பதின்மூன்று வரிசையில் வரிசைக்கு பத்து மணிகள் வீதமாக பார்ப்பதற்கு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள் போலவே காட்சி தரும். அபாகஸ் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் எண்ணை காட்சி வழியாக பார்ப்பது, காட்சியை எண்ணாக மாற்றுவது. இது பாரம்பரிய முறை. இளம் சிறார்களின் அறிவு வளர்ச்சியை அதிகமாகத் தூண்டிவிடும் அதாவது முழு மூளை வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட ஒரு கணிப்பீட்டுக் கருவி எனலாம். முக்கியமாக ஒரு சில ஆசிய நாடுகளில் எண்கணித செயற்பாடுகளில், பயன்படுத்தப்பட்ட ஒரு கணிப்பீட்டுக் கருவியாகும்.
தற்காலத்தில், இந்த எண்சட்ட கருவியானது மூங்கிலாலான செவ்வக வடிவ சட்டத்தில், குறுக்காக உள்ள இணைப்புகளில், மணிகளைக் கோர்த்து உருவாக்கப்படுகிறது. ஆனால், ஆரம்ப காலத்தில் இது மண், கல், மரம் அல்லது உலோகத்தில் ஏற்படுத்தப்படும் நீண்ட, குறுகிய பள்ளமான அமைப்புகளில், பயற்றம் விதைகள் அல்லது சிறிய கற்களை வைத்து நகர்த்துவதுபோல் அமைக்கப்பட்டிருந்தது. தற்கால எண்களுக்குரிய எழுத்து வடிவம் தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த எண்சட்ட முறையானது தோன்றியிருந்தபோதிலும், தற்காலத்திலும், பல ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் தற்போது வேகமாக வளர்ச்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
7
Dislike
0
Love
1
Funny
1
Angry
0
Sad
0
Wow
2