திருச்சி புறத்தாக்குடி புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் 75 -வது ஆண்டு முப்பெரும் விழா - நூல் வெளியீட்டு விழா 

Jan 10, 2026 - 13:51
 0  62
திருச்சி புறத்தாக்குடி புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் 75 -வது ஆண்டு முப்பெரும் விழா - நூல் வெளியீட்டு விழா 

திருச்சி புறத்தாக்குடி புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் 75 -வது ஆண்டு முப்பெரும் விழா - நூல் வெளியீட்டு விழா 

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் அமைந்துள்ளது அரசு உதவி பெறும் புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் 75 ஆண்டு முப்பெரும் விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் ராபர்ட் செல்வன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அத்தோனிசாமி , கும்பகோணம் மறை மாவட்ட பேராயர் ஜீவானந்தம் அமலநாதன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி பள்ளி குறித்த புத்தகத்தினை வெளியிட்டனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் ராபர்ட் செல்வன் 75 ஆண்டுகால பள்ளியின் சாதனை குறித்த விளக்கவுரை ஆற்றினார். தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .

இந்நிகழ்வில மறை மாவட்டம் முதன்மை குரு பிலோமின் தாஸ் ,மறை மாவட்ட பொருளாளர் அந்தோணி ஜோசப் ,லால்குடி மறை மாவட்ட முதன்மை குரு சேவியர் , பங்கு தந்தை (தாளாளர் ) கஸ்பர் ,முதுகலை ஆசிரியர் ராஜேந்திர சேகர் ,அன்புராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .

மேலும், பள்ளி ஆசிரிய பெருமக்கள் ,மாணவ , மாணவிகள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பள்ளி பவள விழாவை முன்னிட்டு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0