நடிகர் விஜய்யின் ஜனநாயகம் வெளியீடுக்கு மீண்டும் முட்டுக்கட்டை!
ஜனநாயகன் படத்துக்குச் சான்று வழங்க நீதிபதி உத்தரவு: தணிக்கை வாரியம் மேல் முறையீடு: தொடரும் முட்டுக்கட்டையால் தள்ளிப் போகும் ஜனநாயகன்
ஜனவரி 9ஆம் தேதியான இன்று ஜனநாயகன் திரைப்படம் வெளியாக இருந்தது. இருப்பினும் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இருப்பதாக தணிக்கை குழு படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியிருந்தது. இதையடுத்து இது குறித்து அட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா படத்திற்கு இன்றே உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
ஒரு உறுப்பினரின் புகாரை கொண்டு எப்படி மறு ஆய்வுக்கு அனுப்ப முடிவும்? என நீதிபதி கேள்வி கேட்டுள்ளார். மேலும் படத்திற்கு UA சான்றிதழ் அளித்த பிறகு தலைவருக்கான அதிகாரம் முடிந்தது.
மறு ஆய்வுக்கு அனுப்பியதை ஏற்க முடியாது. நடிகர் விஜய்–ன் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க சென்சார் போர்டுக்கு உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி ஆஷா.
இந்த நிலையில், பட தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில், மறு ஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்பும் முடிவு ஏற்கத்தக்கதல்ல. மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவு ரத்து, உடனடியாக படத்தை வெளியிடச் சான்று வழங்க நீதிபதி ஆஷா உத்தரவு பிறப்பித்த நிலையில், மத்திய அரசின் தணிக்கை வாரியம் உடனடியாகவே மேல்முறையீடு செய்துள்ளதால் ஜனநாயகனுக்கு மீண்டும் முட்டுக்கட்டை தொடர்கிறது. ஜனநாயகம் படத்துக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்ததால் விஜயின் ஜனநாயகம் வெளியீடு சிக்கலில் சிக்கித் தவிக்கிறது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0