பிள்ளையார்பட்டியில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்:ஜனநாயகன் போஸ்டர் வைத்து வழிபாடு!

Jan 9, 2026 - 00:53
 0  12
பிள்ளையார்பட்டியில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்:ஜனநாயகன் போஸ்டர் வைத்து வழிபாடு!

பிள்ளையார்பட்டியில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்:ஜனநாயகன் போஸ்டர் வைத்து வழிபாடு!

 

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள உலகப் புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீகற்பக விநாயகர் திருக்கோவிலில் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் ஆனந்த், ஜனநாயகன் போஸ்டரை வைத்து சாமி தரிசனம் செய்தார்.

 புஸ்ஸி ஆனந்த் கற்பக விநாயகரை தரிசித்த பிறகு கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி வந்து மருத மரம் அருகே ஜனநாயகன் போஸ்டரை வைத்தும், பரிவார தெய்வங்களையும், நவகிரகங்களையும் சுற்றி வந்து வழிபாடு செய்தார்.

 

பின்பு 108 தேங்காய் உடைத்து படம் வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் நீங்குமாறு வேண்டினார். கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி கரூர் பிரச்சனை காரணமாக வழக்கு நிலுவையில் இருந்த போது இதேபோன்று பிள்ளையார்பட்டிக்கு வருகை தந்து வழிபாடு நடத்தினார். தற்பொழுது ஜனநாயகன் படம் பிரச்சனை நிலவி வரும் நிலையில் மீண்டும் வழிபாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0