லேப்டாப் வழங்கும் விழாவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் "மிஸ்ஸிங்" புறக்கணித்தாரா அமைச்சர் கே.என்.நேரு?

Jan 8, 2026 - 20:18
 0  9
லேப்டாப் வழங்கும் விழாவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் "மிஸ்ஸிங்" புறக்கணித்தாரா அமைச்சர் கே.என்.நேரு?

லேப்டாப் வழங்கும் விழாவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் "மிஸ்ஸிங்" புறக்கணித்தாரா அமைச்சர் கே.என்.நேரு?

 

திருச்சியில் லேப்டாப் வழங்கும் விழாவில் பங்கேற்க எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு விடுக்காமல் புறக்கணித்தாரா என திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் 10 லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கல்லூரிகளில் லேப்டாப் வழங்கும் விழாவை நடத்தி வருகின்றனர்.

இந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று கல்லூரிகளில் லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த வகையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் எஸ்.ஆர்.சி கல்லூரிகளில் லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த இரு கல்லூரிகளும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.

ஆனால் இந்த விழாவில் கலந்து கொள்ள திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திமுக இனிக்கோ இருதயராஜுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் விழாவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் திமுக தலைமை மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி வருகிறது. ஆனால் இத்தகைய திட்டங்கள் உட்கட்சி பூசல் காரணமாக திருச்சி கிழக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு அழைப்பு அனுப்பாமல் விழாவை நடத்தி இருப்பது பலரையும் திமுகவின் அருகே அதிர்ச்சியடைய செய்துள்ளது.

திமுகவை பொருத்தவரை தனியார் விழாவோ, கட்சி நிகழ்வோ, அரசு நிகழ்வோ கட்சியினர் திருமணம் உள்ளிட்ட நல்ல காரியங்கள் மற்றும் துக்க காரியங்கள் போன்றவை என்றால் அந்தந்த வட்ட செயலாளர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னரே சம்பந்தப்பட்ட அமைச்சரோ, முக்கிய விருந்தினரோ அந்த வார்டுக்குள் செல்வார்கள். இத்தகைய நடைமுறை பின்பற்றப்படுபட்டு வருகிறது.

ஆனால் இன்று நடைபெற்ற லேப்டாப் வழங்கும் விழாவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினருக்கே அழைப்பு இல்லாமல் விழாவை நடத்தி முடித்து இருப்பது திமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்ட திமுகவை பொருத்தவரை மத்திய மற்றும் வடக்கு மாவட்டம் அமைச்சர் கே.என்.நேருவின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய தெற்கு மாவட்டம் அமைச்சர் மகேஷ் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அமைச்சர் கே.என்.நேருவுக்கு மகேஷுக்கும் இடையே போட்டாபோட்டி உள்ளது.

இந்த போட்டாபோட்டி காரணமாக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் நடைபெற்ற லேப்டாப் விழாவிற்கு எம்.எல்.ஏ. இனிக்கோவுக்கு திட்டமிட்டு அழைப்பிதழ் அனுப்பாமல் அமைச்சர் கே.என்.நேருவால் புறக்கணிக்கப்பட்டாரா என்று திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட திமுகவினர் முணுமுணுக்க தொடங்கியுள்ளனர்.

இந்த நிகழ்வில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், மாவட்ட ஆட்சியர் சரவணன் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, இன்று திருச்சி ஸ்ரீரங்கம் பேருந்து நிலைய துவக்க விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொகுதி எம்பி துரை வைகோ ஆகியோர் பெயர்கள் அழைப்பிதழ் மற்றும் கல்வெட்டில் விடுபட்டது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0