இன்று முதல் ஜல்லிக்கட்டு முன்பதிவு தொடக்கம்
மதுரை ஜல்லிக்கட்டு 2026: ஆன்லைன் முன்பதிவு தொடங்குகிறது
உலகப்புகழ் பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (ஜனவரி 7) தொடங்குகிறது.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளன. இதற்கான முன்பதிவு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இணையதளம்: ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் madurai.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.
நேரம்: முன்பதிவானது இன்று (07.01.2026) மாலை 5 மணி முதல் தொடங்கி, நாளை (08.01.2026) மாலை 5 மணி வரை நடைபெறும்.
விதிமுறைகள்: ஒரு இடத்தில் மட்டுமே அனுமதி: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டில், ஒரு வீரர் அல்லது காளை உரிமையாளர் ஏதேனும் ஒரு இடத்தில் மட்டுமே பங்கேற்க முடியும்.
டோக்கன் விநியோகம்: ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களின் சான்றிதழ்கள் முறையாக சரிபார்க்கப்பட்ட பின்னரே, தகுதியான நபர்களுக்கு போட்டியில் பங்கேற்பதற்கான டோக்கன் வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள்: அவனியாபுரம்: ஜனவரி 15,
பாலமேடு: ஜனவரி 16
அலங்காநல்லூர்: ஜனவரி 17
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0