திருவெறும்பூரில் குதிரைப்போட்டி : அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் விபத்து

Jan 5, 2026 - 16:14
 0  121
திருவெறும்பூரில் குதிரைப்போட்டி : அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் விபத்து

திருவெறும்பூரில் குதிரைப்போட்டி : அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் விபத்து

தமிழ்நாடு மாநில குதிரை உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் நலச்சங்கத்தின் சார்பாக குண்டூர் நவல்பட்டு 100 அடி சாலையில் நடந்த முதலாம் ஆண்டு குதிரை பந்தயபோட்டியை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வின் போதே குதிரை வண்டி மோதி கீழே விழுந்த முன்னாள் திருவெறும்பூர் ஒன்றிய துணை பெரும் தலைவரை அன்பில் மகேஷ் பொய்யாமொழி கை தாங்கலாக தூக்கி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் திருச்சியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

நவல்பட்டு பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியில் புது குதிரை ஒன்று மற்றும் இரண்டு பிரிவுகளிலும் அளவு குதிரை 43 மற்றும் 45 ஆகிய பிரிவுகளிலும், நடு குதிரை மற்றும் பெரிய குதிரை என ஆறு பிரிவுகளில் குதிரை பந்தயம் நடைபெற்றது.

புது குதிரை ஒன்றுக்கு மற்றும் இரண்டிற்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.15 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.12ஆயிரம், நான்காவது பரிசு ரூ.10 ஆயிரம் என திட்டமிடப்பட்டு கொடுக்கப்பட்டது.

43 அளவு குதிரை 7மயில் தூரம் முதல் பரிசு ரூ.25 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.20 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.15 ஆயிரம், நான்காவது பரிசு ரூ 12 ஆயிரம்

45 அளவு குதிரை 8 மயில் தூரம் முதல் பரிசு ரூ.30 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.25 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.20 ஆயிரம், நான்காவது பரிசு ரூ.12 ஆயிரம்

நடு குதிரை 9 மயில் தூரம் முதல் பரிசு ரூ.40 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ30 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.20 ஆயிரம், நான்காவது பரிசு ரூ.13 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெரிய திரை பத்து மயில் தூரம் முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.40 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.30 ஆயிரம், நான்காவது பரிசு ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாது சிறப்பு பரிசுகளும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் புது குதிரை ஒன்று மற்றும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குதிரையின் உரிமையாளர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசுகளை வழங்கினார்.

 மேலும் 43அளவு குதிரை போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்பொழுது திருவெறும்பூர் ஒன்றிய முன்னாள் துணை பெரும் தலைவரும் திமுக பொதுக்குழு உறுப்பினருமான நவல்பட்டு சண்முகம் 43 அழகு குதிரை போட்டியைஅன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்த பொழுது குதிரை வண்டி மோதியதில் கீழே விழுந்து பின் தலையில் பலத்த அடிபட்டது.

உடனே அன்பில் மகேஷ் பொய்யாமொழி சண்முகத்தை தூக்கியதோடு திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தார். 

 அமைச்சர் கலந்து கொண்ட குதிரை போட்டி நிகழ்வில் நடைபெற்ற இந்த விபத்து அப்பகுதியில் பேசு பொருளாக மாறியது.

 க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 2
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0