திருச்சியில் முதல்வர் ஸ்டாலின்: கடும் நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள்
திருச்சியில் முதல்வர் ஸ்டாலின்: கடும் நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மதிமுக நடை பயண துவக்க விழாவுக்கு வந்ததை முன்னிட்டு, முதல்வரை வரவேற்பதற்கும் கூட்டத்திற்கும் பொது மக்களை அதிக அளவில் திரட்ட திமுகவினர் முடிவு செய்தனர். அதன்படி வார்டு வாரியாக திமுகவினர் மக்களை அழைத்து வர பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பேருந்துகளை பயன்படுத்தியதால் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் பேருந்து தட்டுப்பாடு நிலவியது. வேலைக்கு செல்லும் பயணிகள் பயணம் செல்ல முடியாமல் தவித்தனர்.
அதேபோல் நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை, பாலக்கரை, திருச்சி தலைமை தபால் நிலையம், டிவிஎஸ் டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை நேரங்களில் பணிக்கு, பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0