அன்பு செய்ய அறிவுறுத்தும் ஆன்மிகத்தை வைத்து சில கும்பல்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் வம்பு செய்வதற்காக பயன்படுத்துகின்றன- திருச்சியில் ஸ்டாலின்
அன்பு செய்ய அறிவுறுத்தும் ஆன்மிகத்தை வைத்து சில கும்பல்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் வம்பு செய்வதற்காக பயன்படுத்துகின்றன- திருச்சியில் ஸ்டாலின்
அன்பு செய்ய அறிவுறுத்தும் ஆன்மிகத்தை வைத்தே, சில கும்பல்கள், வம்பு செய்வதற்காக பயன்படுத்துகின்றன என மதிமுக தலைவர் வைகோ நடை பயணத்தை துவக்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இது குறித்த விபரம் வருமாறு ;
திருச்சியில் இருந்து மதுரைக்கு வைகோ சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறாா். திருச்சி உழவர் சந்தை அருகே உள்ள மாநகராட்சி திடலில் சமத்துவ நடைப்பயணம் தொடங்கியது. முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு வந்து, சமத்துவத்தை குறிக்கும் சிவப்பு - மஞ்சள் நிற கொடியை வைகோவிடம் வழங்கி, பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த கொடியில் இந்து கோயில், கிறிஸ்தவ தேவாலயம், இஸ்லாமிய பள்ளிவாசல் போன்ற அனைத்து மதங்களையும் குறிக்கும் சின்னங்கள் இடம்பெற்றிருந்தன. இன்று தொடங்கிய நடைப்பயணம் வரும் 12-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
மதிமுக பொதுச் செயலர் வைகோவின் சமத்துவ நடைப்பயணத்தை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது;
வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணம் தான் என் இந்தாண்டின் முதல் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. பொது வாழ்க்கையில் தமிழ்நாட்டில் தன் காலடி படாத இடங்களே இல்லை என மக்கள் பிரச்சனைகளுக்காக நடைபயணம் மேற்கொண்டவர் அண்ணன் வைகோ.
நெஞ்சுரத்தையும் ஸ்டாமினாவையும் பார்க்கும் போது அவருக்கு 82 வயதா அல்லது 28 வயதா என எண்ண தோன்றுகிறது. இளைஞர்கள் நலனுக்காகவும் எதிர்காலத்தின் வளர்ச்சிக்காகவும் செயலாற்றும் இயக்கம் தான் திராவிட இயக்கம்.தன் தள்ளாத வயதிலும் தமிழர்களுக்காக உழைத்து இறுதி மூச்சு வரை பாடுபட்டவர் தந்தை பெரியார். அவர் வழியில் வந்த கலைஞர் 80 ஆண்டு பொது வாழ்விற்கு சொந்தக்காரர் சக்கர நாற்காலியில் அமர்ந்தும் மக்களுக்காக உழைத்தவர்
அப்படிப்பட்ட திராவிட யூனிவர்சிட்டியில் படித்தவர் தான் வைகோ அவர்கள். நானும் அந்த யுனிவர்சிட்டி மாணவன் தான் என்றார்.
மேலும் அவர் பேசுகையில் ; மத்திய அமைச்சர் பொறுப்பில் உள்ளவர்களே, வெறுப்பு பேச்சு பேசி, மோதலை தூண்டும் வகையில் செயல்படுகிறார்கள். அன்பு செய்ய அறிவுறுத்தும் ஆன்மிகத்தை வைத்து சில கும்பல்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் வம்பு செய்வதற்காக பயன்படுத்துகின்றன.
இந்த நிலையில்தான் வைகோ, சமத்துவ நடைபயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அவரது நடைப்பயணம் வெற்றிபெற வாழ்த்துகள்.
நாட்டின் எல்லைக்குள் மற்றும், மாநிலம் விட்டு மாநிலம் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். தமிழக காவல்துறை நடத்திய சோதனையில், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டையில் இருந்து 1 லட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகள் சிக்கின.
நாட்டுக்குள் பல்வேறு வழியாக போதைப் பொருள் வருகிறது, அதனை மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி, பாதையை அடைக்க வேண்டும்.
போதைப் பொருளை புழக்கத்தில்விடும் குற்றவாளிகளில், நைஜீரியா போன்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். குழந்தைகளை பொறுப்போடு வளர்க்க வேண்டும் என பெற்றோரை நான் கேட்டுக் கொள்கிறேன். குழந்தைகள் பாதை மாறிப் போவதை வேடிக்கை பார்க்க முடியாது.
யூடியூப் மற்றும் இன்ஸ்டா ரீல்ஸ் பார்க்கும் மாணவர்கள், தவறான பாதைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு உள்ளது. அதுபோல, தாங்கள் எடுக்கும் படங்களில் திரைத்துறையினரும் போதைப் பொருளை ஊக்குவிக்கும் வகையில் காட்சி வைக்கக் கூடாது என்றவர் வைகோவுக்கு அன்பு கட்டளை ஒன்றை இட்டார்.
தங்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு இது போன்ற நடைபயணங்களை இனிமேல் தவிர்க்க வேண்டும் என்றும் கவனமாக நடை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நீங்கள் கட்டளையிட்டால் செய்வதற்கு ஆயிரம் தொண்டர்கள் இருக்கிறார்கள், உடல் நலனை கருத்தில் கொள்ளுங்கள், இனிமேல் இதுபோல் நடை பயணங்களை நீங்கள் மேற்கொள்ளக்கூடாது என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.நி
இந்த நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் மொய்தீன், வி.சி.க தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்ய கட்சி பொதுச்செயலாளர் அருணாச்சலம், தி.க பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகர், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, அன்பில் மகேஷ், மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0